சுற்றுலா வளர்ச்சிக்கு தேவை அடிப்படை வசதிகள்!
“தமிழ்நாடு சுற்றுலாத் துறையை உலகளாவிய முதலீட்டுத் தலமாக மாற்றும் நோக்கத்துடன் ‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாட்டை’ பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் நடத்தியது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் தமிழகத்தில் சுற்றுலா தொடர்பான வேலைவாய்ப்பும் வர்த்தக வளர்ச்சியும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.” தமிழ் நிலத்தின் மீது காலடி பதிக்கும் ஒவ்வொரு பயணியும், இதை அழகி லும் பாதுகாப்பிலும் சிறந்த சுற்றுலா மாநிலமாகப் பாராட்டுகின்றனர். ஆயிர மாயிரம் ஆண்டுகளின் வரலாற்று மணம் கமழும் இம்மண், கலாச்சாரத்தின் கம்பீ ரத்தை உலகிற்கு எடுத்துரைத்துக் கொண்டே இருக்கிறது. கலையழகும் இயற்கையழகும் தமிழ்நாடு வரலாறும் கலாச்சாரமும் இயற்கை எழிலும் ஒன்றிணைந்த பொக்கி ஷம். யுனெஸ்கோவின் உலக பாரம் பரியச் சின்னமான தஞ்சாவூர் பெரிய கோயில், ராஜராஜனின் கனவின் சாட்சி. மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபு ரங்கள், சிற்பங்கள், சிலைகள் சிறப்புக் குரியன. காஞ்சிபுரம், கும்பகோணம், சிதம் பரம், ஸ்ரீரங்கம், வேளாங்கண்ணி, நாகூர், மாமல்லபுரம், ராமேஸ்வரம் என்று ஆயி ரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாய் நிலைத்திருக்கின்றன இந்தப் புனித தலங்கள். வரலாற்றின் ஒவ்வொரு கல் லும், நமது முன்னோர்களின் சிற்பக்கலை வல்லமையையும் கட்டடக் கலைத் திற னையும் சொல்லாமல் சொல்கின்றன. கன்னியாகுமரி மூன்று கடலின் சங்கமம். ஊட்டி தேயிலைத் தோட்டங்க ளின் பசுமை. கொடைக்கானலின் அமை தியான ஏரி. குற்றாலம், ஓகேனக்கல், பாப நாசம் அருவிகளின் இன்னிசை. ஏற்காடு, சேர்வராயன் மலைகளின் அமைதி. இவையனைத்தும் சுற்றுலாப் பயணிக ளின் மனதை வசீகரிக்கின்றன. மழைக் காடுகளின் பச்சைப் போர்வையும், மலைச்சாரல்களின் மெல்லிய மூடுபனி யும், அருவிகளின் வெள்ளி நரைகளும், பயணிகளுக்கு மறக்க முடியாத அனுப வத்தைத் தருகின்றன. எதார்த்தமும் எதிர்பார்ப்பும் இத்தகைய அழகிய சுற்றுலா தளங்களுக்கு தினமும் ஆயிரக்கணக் கான உள்நாட்டு, வெளிநாட்டு பயணி கள் வருகின்றனர். கோயில்களையும் மலைகளையும் கடலையும் காண ஆவ லுடன் பயணிக்கும் இவர்கள், அழகை யும் இயற்கையையும் ரசிக்கின்றனர். அதேநேரத்தில், அடிப்படையான கழிப் பறை வசதிகள் சிறப்பாக இருக்க வேண் டும் என்று எதிர்பார்க்கின்றனர். போதுமான கழிப்பறை வசதிகள் இருப்பது அவசியம். குறிப்பாகப் பெண் களும் குழந்தைகளும் நீண்ட நேரப் பய ணங்களில் இவ்வசதிகளைத் தேடுகின்ற னர். இது மனித கண்ணியத்துடன் நேரடி யாகத் தொடர்புடைய விஷயம். ஒரு குடும்பம் பத்து மணி நேரம் பயணித்து ஒரு கோயிலை அடையும்போது, அங்கே சுத்தமான கழிப்பறை வசதி கிடைக்கா விட்டால், அந்தப் பயண அனுபவமே கசப்பாகிவிடுகிறது. தற்போது இருக்கும் சில கழிப்பறை களும்கூட கதவுகள், தாழ்ப்பாள்கள், பீங்கான் கோப்பைகள் உடைந்து நொறுங்கிய நிலையில் காணப்படு கின்றன. தண்ணீர் வசதி சீரான முறை யில் கிடைக்காத நிலை தொடர்கிறது. இதனால், சுத்தமும் பாதுகாப்பும் பயணி களுக்கு நம்பிக்கை அளிப்பதில்லை. நாற்றம் வீசும் கழிப்பறைகளும், சிதைந்த கட்டமைப்புகளும், வறண்ட குழாய் களும், பயணிகளை வேதனைக்குள் ளாக்குகின்றன. பேருந்து நிலையங்களிலும் சுற்றுலா மையங்களிலும் உள்ள கழிப்பறைகளின் பராமரிப்பு பெரும்பாலும் தனியார் நிறுவனங்களிடம் உள்ளது. இவற்றின் பராமரிப்புத் தரம் தொடர்ச்சியாக கண் காணிக்கப்பட வேண்டும். பணம் வசூ லிக்கப்படும் இடங்களில் அதற்கேற்ற தரமான சேவை கிடைக்க வேண்டும் என்பது பயணிகளின் நியாயமான எதிர்பார்ப்பு. சரியான கட்டுமானமும் வடிகால் வசதியும் முறையாக இல்லாதது, பொது இடங்களின் சுகாதாரம் அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. நோய்த்தொற்றுகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. குறிப் பாக வயிற்றுப்போக்கு,தோல் நோய்கள் போன்றவை அசுத்தமான கழிப்பறை களால் பரவும் அபாயம் உள்ளது. திட்டங்களின் வெற்றுப் பெருமைகள் ‘நம்ம டாய்லெட்’, ‘ஸ்வச் பாரத்’, ‘சுலப்’ போன்ற திட்டங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு கோடானுகோடி ரூபாய் களைச் செலவிடுவதாகப் பெருமை பீற்றிக்கொள்கிறது. ஆனால், முறை யாகப் பராமரிக்கப்படுவதில்லை என் பதே நிதர்சனம். விளம்பரங்களுக்கும் பத்திரிகைச் செய்திகளுக்கும் கோடிக் கணக்கில் செலவிடப்படுகிறது, ஆனால் உண்மையான பராமரிப்புப் பணிகளுக்கு நிதி போதுமானதாக இல்லை. “பேரு பெத்த பேரு, தாகு நீலு லேது” என்ற தெலுங்கு பழமொழியே இந்த நிலை மையை சரியாக விளக்குகிறது. பெய ருக்கு மட்டும் பெருமை, ஆனால் குடிக்க தண்ணீர் இல்லை என்பது அர்த்தம். பொது இடங்களைப் பயன்படுத்து வதில் நமக்கும் பொறுப்பு உண்டு. கழிப் பறையை பயன்படுத்தும் முன்பும் பின்பும் சுத்தமாக வைக்கும் பழக்கம் வளர்க்கப் பட வேண்டும். பொது இடங்களைச் சுத்த மாக வைப்பது நமது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். ஒவ்வொருவரின் சிறு முயற்சியும் சேர்ந்து பெரிய மாற்றத்தை உண்டாக்கும். வளர்ந்த நாடுகளில் பொதுக் கழிப்ப றைகள் நவீன தொழில் நுட்பத்துடன் உலகத் தரத்துடன் பராமரிக்கப்படு கின்றன. தானியங்கிச் சுத்தம் செய்யும் அமைப்பு, உடனடித் தண்ணீர் வழங்கும் வசதி, நாற்றம் தடுக்கும் தொழில்நுட்பம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை பராமரிப்புச் செலவையும் குறைக் கும், சுகாதாரத்தையும் உயர்த்தும். ஒருங்கிணைந்த செயல்பாடு பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்களில் போதுமான கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும். முறையான பராமரிப்பு, தினசரி சுத்தம் செய்யும் பணி யாளர்கள் இருப்பது அவசியம் அவர் களுக்குப் போதுமான ஊதியமும் பாது காப்பு உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் நிர்வாக அமைப்புகள் தொட ர்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். நகராட்சி, உள்ளாட்சி, போக்குவரத்து, சுகாதாரம், சுற்றுலா, இந்து சமய அறநிலையத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும்போதே இதில் நல்ல முன்னேற்றம் சாத்திய மாகும். உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மாநி லமாக மேலும் உயர்வதற்கு, சுத்தமான, நவீன, பாதுகாப்பான பொதுக் கழிப்பறை கள் முக்கியமான அம்சம். நமது வர லாற்றுச் சின்னங்களைப் பார்க்க வரும் பயணிகள், அடிப்படை வசதிகள் இல்லா ததால் ஏமாற்றம் அடையக்கூடாது. உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் பெரிய அறிவிப்புகள் செய்யும் முன், இந்த அடிப்படை வசதிகளை முதலில் சரிசெய்வது அவசியம். இல்லையெ னில், பெரிய கனவுகள் வெறும் வார்த்தை களாகவே நின்றுவிடும். -சி.ஸ்ரீராமுலு
