மேகாலயாவில் நிகழ்ந்த நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளது.
மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதியன்று பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்று 27 ஆக அதிகரித்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். விபத்தை தொடர்ந்து நிலக்கரி சுரங்க உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுரங்கத்திற்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சுரங்க விபத்து தொடர்பாக கிளிஹ்ரியத் காவல் நிலையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
