tamilnadu

img

விளையாட்டு

ஐபிஎல்  2025தில்லி கேப்டனாக அக்சர் படேல்

18ஆவது ஐபிஎல் சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்கு கிறது.  முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசன்களில் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் லக்னோ  அணியில் இணைந்துள்ளதால், அக்சர் படேலிடம்  கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டுள்ளது.  அக்சர் படேல் இதுவரை 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1,653  ரன்கள் மற்றும் 123 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

பார்முலா ஒன் பந்தய வீரர்களுக்கு 50 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை தாங்க நவீன உடை

2025ஆம் ஆண்டின் முதல் பார்முலா ஒன் (F1) சீசனான ஆஸ்திரேலிய கிராண்ட்பிரிக்ஸ் 2025 தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடர் முதல் அதிகளவிலான வெப்பத்தை தாங்கும் வகையில் நவீன உடையை  பார்முலா ஒன் பந்தய வீரர்கள் பயன்படுத்த உள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. 50 டிகிரி செல்ஸியஸ்  வெப்பநிலையை தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப் பட்டுள்ள இந்த நவீன உடை எளிதில் தீப்பற்றாது.  நோமெக்ஸ், ஆக்ஸிஜனேற்றப்பட்ட பாலிஅக்ரிலோ நைட்ரைல் மற்றும் பாலிபென்சிமிடாசோல் போன்ற தீ எதிர்ப்பு செயற்கை பொருட்கள், உள் அடுக்குகளில் கம்பளி  போன்ற துணிகள் உள்ளன. அதே போல காயங்களில் இருந்து பாதுகாக்கும் வசதியையும் இந்த நவீன உடை பெற்றுள்ளது.

பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாஸ்பிரிட் பும்ரா முதுகு வலி காயம் காரணமாக மினி உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகி தற்போது சிகிச்சையுடன் ஓய்வில் உள்ளார்.  வரவிருக்கும் ஐபிஎல் தொடரிலும் காயம் காரணமாக பும்ரா  விளையாடுவது சிக்கல் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பும்ராவிற்கு மீண்டும் காயம் ஏற்பட்டால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும் என நியூஸி லாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷேன் பாண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகையில், “இந்திய வீரர் பும்ராவிற்கு மீண்டும் முதுகில் காயம் ஏற்பட்டால் அத்துடன் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக அர்த்தம். ஏனென் றால் முதுகு பகுதியில் ஒரே இடத்தில் இரண்டு முறை ஆப ரேஷன் செய்ய முடியாது. இது மிக மோசமான சிக்கலை ஏற்படுத்தும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஷேன் பாண்ட் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு பயிற்சி அளித்தவர். அதனால் பும்ரா பற்றி இந்த கருத்தை  அவர் முன்வைத்துள்ளார்.