tamilnadu

img

ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்காவின் அடாவடியைக் கண்டித்து தேனி மாவட்டத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்காவின் அடாவடியைக் கண்டித்து தேனி மாவட்டத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம் 

தேனி,மார்ச் 6- ஏகாதிபத்திய அமெரிக்கா-  இன வெறி இஸ்ரேல்  அரசுகள் இணை ந்து  ஈரான் மீதான இராணுவ தாக்கு தல் நடத்துவதைக் கண்டித்து உத்தமபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  உத்தமபாளையம் பைபாஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  ஏரியா செயலாளர் டி கே சீனிவா சன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை துவக்கி வைத்து மூத்த தலைவர் கே.ராஜப்பன்  பேசினார். மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி  நிறைவுரையாற்றினார்.  மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.எம்.நாகராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.மு. இப்ராஹிம், ஏரியா குழு உறுப்பினர் டி. அம்ச ராஜ், என். அன்பழகன் , ஜெகதீஸ் வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர், சின்னமனூர் சின்னமனூரில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் என். அம்சமணி தலை மையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.எஸ்.ஆறுமுகம், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சஞ்சீவி குமார் ஒன்றியகுழு உறுப்பினர் எம். பால்பாண்டி ஆகியோர் பேசினர்.