tamilnadu

img

திருச்சி புறநகர், திருவாரூரில் வரவேற்புக்குழுக்கள் அமைப்பு

திருச்சிராப்பள்ளி, பிப்.2 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24 ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் மாதத்தில் மதுரையில் நடை பெறுகிறது. இதனை முன்னிட்டு கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டக்குழு சார்பில்  அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் ஞாயிறன்று மணப்பாறையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் கே.சிவராஜன் தலை மை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் வரவேற்றுப் பேசினார். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார். மாநாட்டு வரவேற்புக்குழு தலைவ ராக

எம்.ஜெயசீலன், செயலாளராக கே.சிவராஜன், பொருளாளராக எஸ்.சம்பத் உட்பட 81 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரன்  நன்றி கூறினார்.

திருவாரூர் 

திருவாரூர் அருகே உள்ள கூடூரில்,  வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் டி.முரு கையன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார். அகில இந்திய மாநாட்டு வர வேற்புக்குழு தலைவராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தர மூர்த்தி, செயலாளராக மாவட்டச் செய லாளர் டி.முருகையன், பொருளாள ராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு மற்றும் துணை நிர்வாகி கள் உட்பட 101 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில்  அகில இந்திய மாநாட்டிற்கான முதல் கட்ட நிதி ரூ.2 லட்சத்துக்கான காசோலை, மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் வழங்கப்பட்டது