tamilnadu

img

மணிப்பூர், அருணாச்சலில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்

மணிப்பூர், அருணாச்சலில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்

மணிப்பூர், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் குறிப்பிட்ட காவல் நிலைய எல்லைகளை தவிர்த்து மாநிலம் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) அமல்படுத்தப் படுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளி யிட்டுள்ள அறிவிப்பில், “மணிப்பூர் மாநிலத்தில் (குடி யரசுத் தலைவர் ஆட்சி நடை பெறும் மாநிலம்) 13 காவல் நிலைய எல்லைப் பகுதிகளைத் தவிர, மாநிலம் முழுவதும் ஆயு தப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) நீட்டிக்கப்பட் டுள்ளது. அதே அருணாச்சலப் பிர தேசத்தின் (பாஜக ஆளும் மாநிலம்) திராப், சங்லாங் மற்றும் லாங்டிங் ஆகிய மாவட்டங் களுக்கும், மாநிலத்தின் மூன்று  காவல் நிலைய எல்லைப் பகுதி களுக்கும் அடுத்த 6 மாதங் களுக்கு ஆயுதப்படை சிறப்புச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆயுதப்படை சிறப்பு அதி காரச் சட்டம் என்பது பதற்றம் நிறைந்த அல்லது கலவரப் பதற்றம் உள்ள பகுதிகளில் சட்டம் ஒழுங்கினை பராமரிக்க பாது காப்பு படைகளைக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது.