tamilnadu

தொல்லியல் அகழாய்வு ரூ.7 கோடி

தொல்லியல் அகழாய்வு ரூ.7 கோடி

தமிழ்நாட்டின் தொல்லியல்  அகழ்வாராய்ச்சிகள் சிவகங்கை  மாவட்டம் கீழடி, தூத்துக்குடியில் உள்ள  பட்டணமருதூர், தென்காசி, நாகப்பட்டி னம், கடலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத் தூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில்  மேற்கொள்ளப்படும். வரும் நிதியாண்டில் தொல்லியல் மற்றும் அகழ்வாராய்ச்சி மேற் கொள்ள ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்படும்.  பூம்புகார் முதல் நாகப்பட்டினம் வரை  ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப் படும். இராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் ரூ.21 கோடி யில் உருவாக்கப்படும். சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்து  வழி பண்பாட்டு அரங்கம் உருவாக்கப்ப டும். மாமல்லபுரம் மற்றும் திருவண்ணா மலை ஆகிய இடங்களில் தமிழர் பண் பாட்டு அருங்காட்சியகம் உருவாக்கப்படும். மதுரையில் அருங்காட்சியகம் உலகின் மிக மூத்த தனிச் செம்மொ ழிகளில் ஒன்றான தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தொடர்ச்சியை இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் அகரம் மொழி களின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் அமைக்கப்படும். நொய்யல் அருங்காட்சியகம் கொடுமணல் அகழாய்வுகளை முன்னிலைப்படுத்தி ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் சங்க காலப் பாண்டி யரின் கடல் வழி வணிகச் சிறப்பை விளக்கும் வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் ரூ.21 கோடியிலும் உருவாக்கப்படும். சிந்துவெளி பண்பாட்டு அரங்கம் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப் பின் நூற்றாண்டு நிறைவையொட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு அரங்கம் உருவாக் கப்படும். மேலும், மரபுசார் கட்டிடக் கலை  வடிவமைப்புடன் கூடிய காட்சி அரங்கம் ஒன்று ரூ.40 கோடியில் எழும்பூர் அருங் காட்சியகம் வளாகத்தில் அமைக்கப்படும்.