பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அகில இந்திய நிர்வாகிகள் தேர்வு
கோயம்புத்தூர், ஜூலை 24 - பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய 11-ஆவது மாநாடு, கோயம்புத்தூரில் ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில், பொதுத்துறை நிறு வனங்களை தனியார்மயமாக்குவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்; பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு இரண்டாவது விருப்ப ஓய்வுத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது; புதிய ஓய்வூதியத் திட்டத்தை முழு மையாக ரத்து செய்து, பழைய ஓய்வூதி யத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குத் தரமான 4ஜி சேவை வழங்க வேண்டும்; 5ஜி சேவை யினை உடனே துவக்க வேண்டும்; தேசிய பணமாக்கல் திட்டத்தை கைவிட வேண்டும்; பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் சொத்து மற்றும் நிலங்களை ஒன்றிய அரசு விற்பனை செய்யக் கூடாது; நாடு முழுவதும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்; பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு மேலும், மாநாட்டில் சங்கத்தின் அகில இந்தியத் தலைவராக எம். விஜயகுமார் (கேர ளம்), பொதுச் செயலாளராக அனிமேஷ் மித்ரா (மேற்கு வங்கம்), பொருளாளராக இர்பான் பாஷா (கர்நாடகா), உதவிச் செய லாளராக செல்லப்பா (தமிழ்நாடு) மற்றும் 25 பேர் அகில இந்திய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.