மருத்துவம் செய்யும் எறும்புகள்
எறும்புகள் மனிதர்கள் போல காயம்பட்ட தங்கள் சக உயிரினங்களின் உயிரை காக்க உறுப்பு அகற்றும் அறுவைச் சிகிச்சை செய்கின்றன. தச்சர் எறும்புகள் (Carpenter ants)தொற்று ஏற்படுவதை தடுக்க பாதிக்கப்பட்ட உடல் உறுப்பை பாதிக்கப்பட்ட எறும்பின் உடலில் இருந்து பிரித்தெடுக்கின்றன. மனிதர்கள் தவிர பிற உயிரினங்களில் முதல்முறையாக எறும்புகள் உயிர் காக்க மருத்துவம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொற்றை தடுக்க அறுவை சிகிச்சை காயமடைந்த ஒரு தொழிலாளியின் வாழ்நாளை ஒரு நாள் நீட்டிக்கச்செய்ய சக ஊழியர் மேற்கொள்ளும் அவசர கால உறுப்பு அறுவைச் சிகிச்சை காட்டப்படும் ஒரு ஸ்பீல்பெர்க் (Spielberg) திரைப்படக் காட்சி அல்ல இது. மாறாக எறும்புகளின் நிஜ வாழ்வில் நிகழும் நடத்தைப் பண்பு இது. காயங்களுக்கு அக்கறையுடன் சிகிச்சை செய்வது குறித்த முதல் செய்தி இல்லை இது என்றாலும் இந்த கண்டு பிடிப்பு மனிதர்கள் தவிர எறும்புகள் போன்ற மற்ற உயிரி னங்கள் சக உயிரினங்களின் உயிர் காக்க மருத்துவச் சிகிச்சை செய்கின்றன ஆய்வாளர்கள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர். காலில் ஏற்பட்ட காயங்களை அறுவைசிகிச்சை செய்து எறும்புகள் பாதிக்கப்பட்டவற்றிற்கு தொற்று ஏற்படாமல் தடுக்கின்றன. காயம்பட்ட இடத்தை துல்லியமாகக் கண்டறிந்து அவை சிகிச்சை செய்கின்றன. “”எறும்புகள் நோய் பாதிப்பைக் கண்டறியும் திறன் பெற்றவையாக உள்ளன. காயத்தால் பாதிப்பு ஏற்படாமல் அவ்வுயிரினத்தின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்யும் வகையில் மற்றவை சிகிச்சை செய்கின்றன” என்று ஆய்வுக்கட்டுரையின் முதல் ஆசிரியரும் சுவிட்சர்லாந்து லாசான் (Lausanne) பல்கலைக்கழக ஆய்வாளருமான டாக்டர் எரிக் ஃப்ராங்க் (Dr Erik Frank) கூறுகிறார். இதுபற்றிய ஆய்வுக்கட்டுரை கரண்ட் பயாலஜி (Current Biology) ஆய்விதழில் வெளிவந்துள்ளது. கேம்பனாட்டஸ் ஃப்ளோரிடானஸ் (Camponotus floridanus) என்ற அறிவியல் பெயருடைய ஃப்ளோரிடா தச்சர் எறும்புகளின் வலது பக்க முன் உறுப்பில் ஆய்விற்காக விஞ்ஞானிகள் காயத்தை ஏற்படுத்தி புற்றில் உள்ள சக எறும்புகளின் பதில் வினையை ஒரு வார காலம் உற்றுநோக்கி ஆராய்ந்தனர். பாதிக்கப்பட்ட பதினேழில் பதின்மூன்று எறும்புகள் காயம்பட்ட எறும்புகளின் தொடைப்பகுதியில் ட்ரோக்கண்டர் (trochanter) என்ற இடுப்பு எலும்புடன் உள்ள இணைப்பை மற்ற எறும்புகள் அறுவைச் சிகிச்சை செய்து அகற்றின. சக எறும்புகள் காயம்பட்ட உறுப்பை தங்கள் வாயால் நக்கி பின் அதை வேறிடத்திற்கு கொண்டு சென்றன. ட்ரோக்கண்டர் பகுதியை அடைவதற்கு முன்பு மற்ற எறும்புகள் காயம்பட்ட காலை அது வெட்டப்படும்வரை தொடர்ச்சியாக கடித்தன. உயிரை நீட்டிக்க உதவும் உறுப்பு சிகிச்சை இதில் இருந்து வித்தியாசமாக மற்ற ஒன்பது எறும்புகள் டிபியா (tibia ) என்று அழைக்கப்படும் காலின் கீழ்ப்பகுதியில் காயமடைந்தபோது மற்ற எறும்புகள் பாதிக்கப்பட்ட உயிரி னத்திற்கு எந்த அறுவைச் சிகிச்சையையும் செய்யவில்லை. மாறாக இந்த ஒன்பது எறும்புகளும் அவற்றின் சக எறும்பு களிடம் இருந்து நக்குதல் மூலம் மட்டும் சிகிச்சை பெற்றன. தொற்றால் பாதிக்கப்பட்ட எறும்புகளிடம் நடந்த இதே போன்ற ஆய்விலும் இதே முடிவுகள் கிடைத்தன. எறும்புகளின் மற்றொரு காலனியில் சக உயிரினங்க ளால் காயங்கள் தூய்மை செய்யப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது. இவற்றை விட தனித்து இருந்தவை உயிரி ழக்கும் வாய்ப்பு அதிகம். நலமடைந்து காலனிகளுக்கு திரும்பி வந்த எறும்புகளிடையில் உயிர் பிழைக்கும் விகிதம் அதிகமாகக் காணப்பட்டது. சக எறும்புகள் அளித்த சிகிச்சை யின் பலனே இது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. காலின் கீழ்ப்பகுதி அகற்றப்பட்ட எறும்புகளுக்கு எதிர் உள்ளுணர்வு காரணமாக இத்தகைய சிகிச்சை பலனளிக்கவில்லை என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் தொடர்ந்து நடந்த ஆய்வுகள் இந்த உயிரினங்களின் உடலைச் சுற்றி பம்ப் செய்யப்படும் இரத்தம் போன்ற திரவத்தால் அதன் உடலமைப்பு சேதமடைகிறது என்று கண்ட றியப்பட்டது. காலின் கீழ்ப்பகுதி காயங்களை விட தொடை எலும்பு காயங்களே அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. காலின் கீழ்ப்பகுதியை விட தொடைப்பகுதியில் ஏற்படும் காயங்களில் உடலின் மற்ற பகுதிகளுக்கு தொற்று வேகமாக பரவுகிறது. இதனால் இவற்றுக்கு நடத்தப்படும் உறுப்பு நீக்கம் சிகிச்சை அதிக பயனை தரவில்லை. பொதுவாக எறும்புகள் பக்கத்தில் உள்ள மற்ற எறும்பு காலனிகளுடன் ஏற்படும் எல்லை தகராறுகளால் அதிகம் காயமடைகின்றன. காயம்பட்டவற்றுக்கு சிகிச்சை செய்வது பலன் தருகிறது. இந்த இன எறும்புகளில் பத்து முதல் பதினோரு எறும்புகள் வரை உணவுக்காக வேட்டையாடச் செல்லும் போது காயமடைகின்றன. என்றாலும் பாதிக்கப்பட்டவையும் காலனியில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளன. “இந்த ஆய்வு முடிவுகளில் வியப்பில்லை. சமூகமாக வாழும் தொழி லாளர் பூச்சிகளில் இத்தகைய வாழ்க்கைமுறை தகவமைப்பு பண்பு காணப்படுகிறது. கூட்டில் இருக்கும் சக தேனீக்கு வேலைக்கார தேனீ வாகில் (waggle) நாட்டியமாடி உணவிருக்கும் திசையை தெரியப்படுத்துவது போல அல்லது காலனியின் நன்மைக்காக ஒரு தேனீ தன் உயிரை தியாகம் செய்வது போல இந்த எறும்புகள் காலனிக்கு உழைக்க, உதவ ஒருவருக்கொருவர் உதவி புரிகின்றன. இது போலவே காயமடைந்த எறும்புகளுக்கு சக எறும்பு கள் சிகிச்சை அளிக்கின்றன” என்று சசெக்ஸ் பல்க லைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் பிரான்சிஸ் ராட்னிக்ஸ் (Prof Francis Ratnieks) கூறுகிறார். நோய்வாய்ப்பட்டு துய ரத்தில் இருக்கும் ஒருவருக்கு பிரதிபலன் பாராமல் உதவும் மகத்தான பண்பு மனிதருக்கு மட்டுமே சொந்தமானது என்ற கருத்து தவறு என்பதை இந்த ஆய்வு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன அல்லவா?