tamilnadu

img

அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல் தொல்லை மாணவர் சங்க போராட்டத்தால் பேராசிரியர் கைது

அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல் தொல்லை மாணவர் சங்க போராட்டத்தால் பேராசிரியர் கைது

சென்னை, மார்ச் 27- அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலி யல் தொல்லை கொடுத்த பேராசிரியர் பணியிடை  நீக்கம் செய்யப்பட்டு ள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழில் துறை பொறியியல் பிரிவு பேராசிரியராக ஞான வேல்பாபு உள்ளார். மாணவிகளிடம் வரம்பு மீறி பேசுவது, பாலியல் தொல்லை தருவது, போனில்  தவறான குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், கடந்த 2 ஆண்டுகளாக பாதிக்கப் பட்டு வந்த மாணவி புகார் அளித்தும் பல்கலை. நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் செய்தார். இந்நிலையில் இந்திய மாண வர் சங்கத்தினர் வெள்ளியன்று (மார்ச் 27) பல்கலை.யை முற்றுகையிட்டு போராட்டம் நடத் தினர். பேராசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டும், வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டு மென்று முழக்கமிட்டனர். காவல்துறையினர் தேர்தல் நடத்தை விதி களை காட்டி போராட்டத்தை தடுக்க முயன்றனர்.  அதனையும் மீறி போராட்டம் நடந்தது. இதனை யடுத்து பல்கலை. பதிவாளர் குமரேசன், மாண வர் சங்கத் தலைவர்களிடம் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பேராசிரியரை உடனடியாக பணி யிடை நீக்கம் செய்ய வேண்டும். அதற்கான ஆணையை எழுத்துப் பூர்வமாக வழங்க வேண்டும். பாலியல் தொல்லை கொடுத்த பேரா. ஞானவேல்பாபுவை ஐசிசி கமிட்டி விசார ணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பேராசிரியர் மீது காவல்துறை வழக்கு  பதிந்து கைது செய்ய பல்கலைக்கழக நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தற்காலிக பணிநீக்கம் சுமார் 3 மணி நேரம் போராட்டம் நீடித்தது. அதன்பிறகு பேராசிரியர் ஞானவேல் பாபுவை தற்காலிக நீக்கம் செய்ததற்கான ஆணையை சங்கத் தலைவர்களிடம் பல்கலைக்கழக பதிவா ளர் அளித்தார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய  மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச்  செயலாளர் ச.ஆனந்தகுமார், ‘காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மாணவி புகார் அளித்தும் பல்கலைக்கழக ஐசிசி கமிட்டியை நடத்தாமல் உள்ளனர். பேராசிரியரை பாது காக்கக் கூடிய வகையில் பல்கலை. நிர்வாகம் செயல்படுகிறது. ஐசிசி குழு விசாரணை நடத்தி  பேராசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டும். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என்றார். வழக்கு பதிவு மாணவி புகாரின் பேரில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஞான வேல்பாபு மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் 4 மாணவிகள் புகார்  அளித்ததை தொடர்ந்து பேராசிரியர் நெல்லை யில் கைது செய்யப்பட்டார். இந்தப் போராட்டத்தில் மாணவர் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் அமர்நீதி, மாநிலக் குழு  உறுப்பினர் ஸ்வேதா, மாவட்ட துணை நிர்வாகி கள் கமலேஷ், ராமலிங்கம், செயற்குழு உறுப்பி னர்கள் இலக்கியா, சஞ்சய் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.