tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர்கள்  இன்று வேலைநிறுத்தம்

அங்கன்வாடி ஊழியர்கள்  இன்று வேலைநிறுத்தம்

சென்னை: காலமுறை ஊதியம் கேட்டு ஜன.6 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.தேவமணி, தேர்தல் வாக்குறுதிப்படி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் போது பணிக்கொடையாக நீதி மன்ற தீர்ப்பின்படி 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு குடும்ப ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாய்  வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜன.6 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும். ஜன.27 முதல் தொடர் வேலை நிறுத்தம் நடைபெறும்” என்றார். இந்த சந்திப்பின்போது மாநிலச் செயலாளர் எம்.லில்லி  புஷ்பம், கே.நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.