tamilnadu

img

சமூகநலத்துறை இயக்குநரகத்தை அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை

சமூகநலத்துறை இயக்குநரகத்தை அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை

காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்பக் கோரி, அங்கன்வாடி ஊழியர்கள் செவ்வாயன்று (மார்ச் 4) சமூக நலத்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டனர். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் இணை உணவை, முகப் பதிவு (பேஸ் கேப்சர்) செய்து வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு முடி வெடுத்துள்ளது. இதை எதிர்த்து மார்ச் 1 முதல் அங்கன்வாடி ஊழி யர்கள் போராட்டம் நடத்தி வரு கின்றனர். மேலும், அங்கன் வாடி  ஊழியர்களுக்கு பதவி உயர்வு  வழங்க வேண்டும்; அங்கன்வாடி மையங்களில் 25 சதவிகிதத்திற்கு மேற்பட்ட ஊழியர் காலிப்பணியி டங்களையும், 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ள  உதவியாளர் காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்; 2023-ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையில் அமைச்சர் ஒப்புக் கொண்டபடி ஒரு மாதம் கோடை விடுமுறை வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மாநிலம் முழு வதும் மாவட்டத் தலைநகரங்களில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனொரு பகுதியாக சென்னை காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை) உள்ள சமூக நலத்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு அங்கன்வாடி ஊழியர்களும் - உத வியாளர்களும் போராட்டம் நடத்தினர்.  சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டெய்சி, நிர்வாகிகள் ஹேமப்பிரியா, மணிமாலை, சென்னை மாவட்ட நிர்வாகிகள் தேவி  பிரசன்னா, ருக்மணி, நிர்மலா,  ஸ்ரீதேவி ஆகியோர் இப்போராட்டத் தில் கலந்து கொண்ட நிலையில், தலைவர்களை அழைத்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் லில்லி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் பொதுச்செயலாளர் டெய்சி, “15 நாட்களில் பதவி உயர்வு வழங்கப்படும்” என்று இயக்குநர் தெரிவித்ததாக குறிப்பிட்டார். மேலும், அமைச்சருடன் பேசி, ஒரு மாதம் கோடை விடுமுறை வழங்கப் படும்; காலிப்பணியிடங்களை நிரப்ப ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இயக்குநர் உறுதியளித்ததாக தெரிவித்தார். முகப்பதிவு செய்யும் முறைக்கு மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக இயக்குநர் உறுதி அளித்திருப்பதாகவும் டெய்சி தெரி வித்தார்.