பேரவையில் எதிரொலித்த அமித்ஷா - எடப்பாடி சந்திப்பு
சென்னை, மார்ச் 26- சட்டமன்றத்தில் ஊரக வளர்ச்சித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தைத் துவக்கி வைத்து பேசிய அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜு, “தனது பேச்சை நிறைவு செய்யும் போது. கணக்கு கேட்டு தொடங்கிய கட்சிதான் அதிமுக. 2026 ஆம் ஆண்டு முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து புதிய கணக்கை எடப்பாடி பழனிசாமி தொடங்குவார்” என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “நீங்கள் சொல்வது சரிதான்... கணக்கு கேட்டு ஆரம்பித்த அதிமுக, இப்போதும் தப்புக் கணக்குதான் போடுகிறது” என்று விமர் சித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இடையே தில்லியில் நிகழ்ந்த சந்திப்பை விமர் சிக்கும் வகையில் தங்கம் தென்னரசு கூறினார். அப்போது பேரவையில் சிரிப்பொலி எழுந்தது. இதற்கு விளக்கம் அளித்து பேசிய எதிர்க் கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி, “எடப்பாடி பழனிசாமியின் கணக்கு சரியாகத்தான் இருக் கும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரி யாகதான் வரும்” என்று கூறியது சட்டப்பேரவை யில் விவாதப் பொருளானது.