ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, மே 20- தொழிலாளர் சட்ட திருத்த தொகுப்பை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் மருந்து பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களில் படித்த இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க வேண்டும் என்பன உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் செவ்வாய் அன்று பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎப் மாவட்டச் செயலாளர் ஜோஸப் நெல்சன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டச் செயலாளர்கள் சி.ஐ.டி.யு ரெங்கராஜன், ஏ.ஐ.டி.யு.சி சுரேஷ், ஐ.என்.டி.யு.சி மாவட்டச் செயலாளர் வெங்கட் நாராயணன், எச்.எம்.எஸ் ஜான்சன், ஏ.ஐ.சி.சி.டி.யு ஞானதேசிகன், எல்.எல்.எப். தெய்வீகன், பெடரேசன் சிவசெல்வம், தொமுச மாநில பேரவைச் செயலாளர் எத்திராஜ், சிஐடியு மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். இதில் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் வெ.சேவையா, ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் என்.மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் கே.ராஜன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முத்தையா, ஏஐடியுசி நிர்வாகிகள் துரை.மதிவாணன், தி. கோவிந்தராஜ், ஆர்.பி. முத்துக்குமரன், எம்.கருணா, சிஐடியு நிர்வாகிகள் து.கோவிந்தராஜூ, பி.என்.பேர்நீதி ஆழ்வார், அன்பு , வீரையன், இ.டி.எஸ். மூர்த்தி, செங்குட்டுவன், சாய்சித்ரா, தொமுச நிர்வாகிகள் பாஸ்டன், எட்வின், கிருஷ்ணன், மூர்த்தி, முத்தையா, ஐஎன்டியுசி நிர்வாகிகள் ஏ.ரவி, பாரதிதாசன், முத்துக்குமாரசாமி, சங்கர், ஏஐசிசிடியு நிர்வாகிகள் ரமேஷ், ஜெயபால், மாரியப்பன், எச்எம்எஸ் தலைவர் சின்னப்பன், நிர்வாகிகள் செல்வராஜ், ராஜா, யுடியுசி செயலாளர் ராஜாராம், நிர்வாகி கனகராஜ் அனைத்து ஆட்டோ சங்க நிர்வாகிகள் தொமுச சிவா, ஏஐடியுசி இரா.செந்தில்நாதன், சிஐடியு ஜோசப், ஐஎன்டியுசி பாரதிதாசன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆர்.லெட்சுமணன், தொழிலாளர் விடுதலை முன்னணி ஆட்டோ சங்க தமிழ்முதல்வன், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க மாரிமுத்து, உரிமைக்குரல் சங்க பொதுச்செயலாளர் சிங்காரம், மகஇக இராவணன், மக்கள் அதிகாரம் தேவா, விசிக தொழிலாளர் முன்னணி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட அரசு ஊழியர், ஆசிரியர், இன்சூரன்ஸ், இ.பி, சத்துணவு, அங்கன்வாடி, உடல் உழைப்பு, கட்டுமான சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை தலைமை தபால்நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தொமுச நிர்வாகி பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் டி.பழனிவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகி சி.பக்கிரிசாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, காங்கிரஸ் கட்சி நிர்வாகி ராமசாமி, சிபிஐ நகர செயலாளர் சுதாகர், தொழிற்சங்க நிர்வாகிகள் மோரிஸ் அண்ணாதுரை, பெஞ்சமின், மகாலிங்கம், சிஐடியு நகர பொறுப்பாளர் என்.கந்தசாமி, பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி டி.ஆர்.இ.யூ சார்பில், திங்களன்று திருச்சி ஜங்ஷனில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு டி.ஆர்.இ.யூ கோட்டச் செயலாளர் கரிகாலன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி ஆப்பரேட்டிங் கிளை செயலாளர் மோகன்ராஜ், கமர்சியல் கிளைச் செயலாளர் கோட்டை குமார், உதவி கோட்டச் செயலாளர் அருண் ராஜ், இன்ஜினியரிங் கிளைச் செயலாளர் சிவபாலன் ஆகியோர் பேசினர். துணை பொதுச்செயலாளர் ராஜா நிறைவுரை ஆற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோட்ட பொருளாளர் லட்சுமிபதி நன்றி கூறினார். கும்பகோணம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் கண்ணன், தொமுச செல்வராஜ், ஏஐடியுசி தில்லைவனம், ஐஎன்டியு செல்வராஜ், ஏஐசிசிடியு மதியழகன், எச்எம்எஸ் முருகேசன், ஆர் மோகன்தாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் செயற்குழு உறுப்பினர் அருளரசன், மாநகரச் செயலாளர் செந்தில்குமார், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் மணிமாறன், அரசு ஓய்வூதியர் சங்க மாநில நிர்வாகி ராஜகோபாலன் உள்ளிட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். பொன்னமராவதி பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சாலையோர விற்பனையாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) ஒன்றிய செயலாளர் தீன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வி.ஆர்.எம்.சாத்தையா, வி.எஸ்.ஆர்.கனி ,சௌந்தரம், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் ஒன்றிய செயலாளர் பக்ருதீன், ஏஐடியுசி நிர்வாகி ஏனாதி ஏ.எல்.ராசு ஆகியோர் பங்கேற்றனர்.