அனைத்து மாணவர் அமைப்புகளும் ஒரே குடையின் கீழ் அணி திரள வேண்டும்!
“கல்வி வளாகங்களில் வலது சாரி மாணவர் அமைப்புகள் வள ர்ந்து வருகின்றன. இவர்களின் வளர்ச்சியைத் தடுக்க இடதுசாரி அமைப்புகள் - தலித் மாணவர் அமைப்புகள் மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட இயக்கங்களு டன் கைகோர்க்க வேண்டும்” என் றார், இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் வி.பி. ஷானு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றுள்ள அவர் சனிக்கிழமை கூறியதாவது:- “கல்லூரிகள், பல்கலைக்கழக வளாகங்களில் சாதிப் பாகுபாடு களைக் களைய ரோஹித் வெமுலா சட்டத்தை இயற்ற வேண்டும்; கல்லூரிகள், பல்கலைக்கழகங்க ளில் ஜனநாயகத்தை உறுதி செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்களில் சிறுபான்மை மற்றும் பட்டியல் பழங்குடியினர், பட்டியல் சாதியின ருக்காக அமைக்கப்பட்டுள்ள குழுக் களின் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும். ‘யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஆஃப் இந்தியா (USI)’ என்ற ஒரே குடை யின் கீழ், நாடு முழுவதும் உள்ள 16 மாணவர் இயக்கங்கள் ஒன்றிணை ந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவு மாணவர்களின் கல்வியையும் பாதிக்கும் பொதுவான பிரச்சனை க்கு எதிராகப் போராடி வருகின்றன. தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராடுவதற்கும், பாஜக- வின் கல்வி விரோத நடவடிக்கை களை எதிர்த்துப் போராடுவதற்கும் யுஎஸ்ஐ தொடர்ந்து செயல்பட வேண்டும். தலித்துகள் மற்றும் பழங்குடி யின மாணவர்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு இன்னும் தீவிர மாகப் போராட வேண்டியுள்ளது. சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மாணவர்களைப் பாதிக்கும் பிரச்ச னைகளிலும் தீவிர கவனம் செலுத்து வோம். இந்திய மாணவர் சங்கம் மட்டுமே சிறுபான்மையினர், தலித் துக்கள், ஆதிவாசி பிரதிநிதிகளை தலைமைப் பொறுப்பிற்குக் கொண்டு வருகிறது. ஹைதராபாத் மத்தியப் பல்க லைக்கழகம் போன்ற மத்தியப் பல் கலைக்கழகங்களில், தலித் மாண வர் சங்கம், அம்பேத்கர் மாணவர் சங்கம் மற்றும் பகுஜன் மாணவர்க ளுடன் இணைந்து இந்திய மாண வர் சங்கம் தேர்தலில் வெற்றி பெற் றுள்ளது. பல்கலைக்கழகங்களில் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட வேண்டும். ஜனநாயகத்தைப் பாது காக்க யுஎஸ்ஐ தொடர்ந்து போரா டும்” என்றார். சமீபத்தில், “’டாடா இன்ஸ்டிடி யூட் ஆப் சோஷியல் சயின்ஸில் (TISS)’ படிக்கும், மாணவர் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர், இரண்டு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டார். இடை நீக்கத்தை எதிர்த்து மும்பை உயர்நீதிமன் றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், “அரசு நிதியுதவி பெறும் எந்த மாண வரும் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்ததைக் குறிப்பிட்ட வி.பி. ஷானு, “இந்தத் தீர்ப்பு ஆபத்தானது. முக்கியமான கல்வி நிறுவனங்களை ஆக்கிரமித்துள்ள வலதுசாரி அரசி யல் வாதிகள், நீதித்துறையில் தங்க ளது செல்வாக்கைப் பயன்படுத்து கின்றனர்” என்றார். “அதிக சம்பளம் தரும் வேலை, வெளிநாடுகளில் குடியேற வேண் டும் என்ற நடுத்தர வர்க்க மாண வர்களின் ஆசை, இந்தியாவில் மாணவர்கள் இயக்கத்தை எவ்வாறு பாதித்துள்ளது,” என்ற கேள்விக்கு பதிலளித்த ஷானு, “இது ஒரு புதிய சூழ்நிலை அல்ல, சுதந்திரப் போ ராட்ட காலத்திலிருந்தே இந்தப் போக்கு உள்ளது என்றார். பல இளைஞர்கள் சமூக ஊடகங்கள் மூலம் ஊழல், சமூக அநீதிகளுக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ள னர்” என்று கூறினார். “அகில் பாரதிய வித்யார்த்தி பரி ஷத் அமைப்பை எதிர்கொள்வதில் கேரளத்தில் இந்திய மாணவர் சங்கம் வன்முறை மற்றும் ஜன நாயகத்திற்கு புறம்பான வழிக ளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படு கிறதே!” என்ற கேள்வியை முற்றி லுமாக நிராகரித்த ஷானு, “எங்க ளின் வளர்ச்சியைத் தடுக்க சங்பரி வார் அமைப்புகளால் உருவாக்கப் பட்ட போலிச் செய்திகள், கட்டுக்கதை கள்” என்றார்.