tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24வது மாநாட்டையொட்டி தருமபுரியில் நடைபெற்ற கருத்தரங்கில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, டாக்டர் விஜு கிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் அ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மூத்த தலைவர் இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, வி.மாதன், சி.நாகராஜன், எம்.முத்து, சோ.அருச்சுணன், வே.விஸ்வநாதன், ஆர்.மல்லிகா, ஜி.சக்திவேல், தி.வ.தனுசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தருமபுரி மாவட்டக்குழு சார்பில் மாநாட்டு நிதி 3வது தவணையாக ரூ.2லட்சத்து 14ஆயிரம் வழங்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24வது மாநாட்டையொட்டி திண்டுக்கல்லில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., எம்.சின்னதுரை எம்எல்ஏ., ஆகியோர் உரையாற்றினர்.  திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் மாநாட்டு நிதியாக ரூ.10லட்சத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முத்துசாமி வழங்கினார். மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ராணி, மாநகரச் செயலாளர் ஏ.அரபு முகமது, ஒன்றியச் செயலாளர் சரத்குமார் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.