tamilnadu

img

திருவனந்தபுரத்தில் ஏ.கே.ஜி. மையம் திறப்பு

திருவனந்தபுரத்தில் ஏ.கே.ஜி. மையம்  திறப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழு அலுவலகமான ஏ.கே.ஜி. மையத்தின் திறப்பு விழா, திருவனந்தபுரத்தில் புதன்கிழமையன்று நடைபெற்றது. மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் மாஸ்டர் தலைமையிலான இந்த விழாவில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன், தோழர் ஏ.கே.ஜி. மையத்தைத் திறந்து வைத்தார். கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ. விஜயராகவன், மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே. பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.