tamilnadu

பாஜகவிடம் தலையாட்டி பொம்மையாக இருக்கும் அதிமுக!

பாஜகவிடம் தலையாட்டி பொம்மையாக இருக்கும் அதிமுக!

இராமநாதபுரம் விழாவில் முதலமைச்சர் குற்றச்சாட்டு

இராமநாதபுரம், அக்.3- இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள புல்லாங்குடி பகுதியில் நடை பெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.738 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட  உதவிகளை வழங்கினார். முடிக்கப் பட்ட திட்டங்களை தொடங்கி வைத்த துடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்  நாட்டினார்.  புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பரமக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கான சமூக  நீதி விடுதி கட்டிடம், கோவிலாங்குளத் தில் பள்ளி மாணவர்களுக்கான சமூக  நீதி விடுதி, தங்கச்சிமடத்தில் மேல் நிலைப் பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்த விழாவில் உரையாற்றிய முத லமைச்சர், “பல்வேறு பெருமை களுக்கு பெயர்போன இராமநாதபுரம் மண்ணில் மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ்கின்றனர் என்று குறிப்பிட்டார். விரி வாக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டம் டிசம்பரில் தொடங்கப்படும் என்றும், இதன் மூலம் 2.95 லட்சம் மக்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவித்தார். இனிமேல் இராமநாதபுரத்தை ‘தண்ணி யில்லா காடு’ என்று சொல்ல முடி யாது என்று அவர் வலியுறுத்தினார். மாவட்டத்தில் 2.36 லட்சம் பெண்கள் மக ளிர் உரிமைத் தொகை பெறுவதாகவும் குறிப்பிட்டார். இராமநாதபுரம் தேசிய நெடுஞ் சாலை ரூ.30 கோடி செலவில் 4 வழிச் சாலையிலிருந்து 6 வழிச்சாலையாக மாற்றப்படும் என்று அறிவித்தார். திரு வாடானை, ஆஸ்மங்கலம் வட்டங்க ளில் உள்ள 16 கண்மாய்கள் ரூ.18 கோடி யில் மேம்படுத்தப்படும் என்றும், பழைய  பேருந்து நிலையம் நவீன வளாகமாக மாற்றப்படும் என்றும், பரமக்குடி நக ராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்  என்றும் தெரிவித்தார். சொன்னதை  மட்டும் செய்வதல்ல; சொல்லாத வற்றையும் செய்யும் அரசு இது” என்று  அவர் கூறினார். மீனவர்கள் புறக்கணிப்பு இலங்கை கடற்படையினர் தமி ழக மீனவர்களைச் சிதைக்கும் நட வடிக்கைகளை தொடர்ந்து கண்டித்து  வருவதாகவும், ஆனால் ஒன்றிய பாஜக  அரசு இதனை கண்டுகொள்ளவில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். கச்சத்தீவை மீட்பது குறித்த தீர்மா னத்தை சட்டப்பேரவையில் நிறை வேற்றி, ஒன்றிய அரசுக்கு அனுப்பி யுள்ளதாகவும், ஆனால் அதில் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு மீனவர்களும் இந்தி யர்கள்தான். இலங்கை அமைச்சர் ‘கச்சத்தீவை தர மாட்டோம்’ எனக்  கூறியபோது, இந்திய வெளியுற வுத்துறை அமைச்சர் கண்டனம் தெரி வித்திருக்க வேண்டும் அல்லவா என்று  கேள்வி எழுப்பினார். ஆனால் பாஜக  அரசு தமிழக மீனவர்களை புறக்க ணித்துவிட்டது என்று அவர் குற்றம்  சாட்டினார். இதுவரை நமது மீன வர்களை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வருத்தம் தெரி வித்தார். இவ்விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், சட்டமன்ற உறுப்பி னர்கள் முத்துராமலிங்கம், முரு கேசன், மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சந்தீஷ் மற்றும் அனைத்துத்  துறை அலுவலர்கள் பங்கேற்றனர். முதலமைச்சர் கீழடி அருங்காட்சி யகத்தை பார்வையிட்ட போது, அங்கு  காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சுமார் 13,000 தொல்பொருட்களை ஆய்வு செய்தார்.