tamilnadu

img

சுதந்திர பாலஸ்தீனம் அமையட்டும் - சிபிஎம் தலைமையில் கண்டன இயக்கம்!

காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலையை கண்டித்து சிபிஎம் தலைமையில் சென்னையில் கண்டன இயக்கம் நடைபெற்றது.
சுதந்திர பாலஸ்தீனம் அமையவும், இஸ்ரேல் நடத்தி வரும் காசா இனப்படுகொலைக்கு எதிராகவும், இனவெறி இஸ்ரேல் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்ய கோரியும் சென்னையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ‌.சண்முகம் தலைமையில் கண்டன இயக்கம் நடைபெற்றது.
இந்த கண்டன இயக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை இந்திய அரசு எடுக்க வலியுறுத்தியும் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார்