திருச்சி, கோவை, 11 விமான நிலையங்களை தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
பொதுத்துறை சொத்துகளை தனியாருக்கு ஒப்படைத்து நிதி திரட்டும் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 11 விமான நிலையங்களை தனியாருக்கு வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
முதல் கட்டமாக திருச்சி, கோவை, வாரணாசி, அமிர்தசரஸ் ஆகிய விமான நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் புவனேஸ்வர், இந்தூர், ராய்ப்பூர், கோழிக்கோடு, ராஞ்சி, ஜோத்பூர், கயா ஆகிய விமான நிலையங்களையும் தனியாருக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.27,500 கோடி நிதி திரட்ட ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
பொதுத்துறை சொத்துகளை தனியாருக்கு ஒப்படைத்து நிதி திரட்டும் திட்டத்தின் முதல் கட்டத்தில் ரூ.13,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டாம் கட்டத்தில் அந்த இலக்கு இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
