tamilnadu

img

8 மாத கூலி நிலுவையை வழங்க வேண்டும் விவசாயத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

8 மாத கூலி நிலுவையை வழங்க வேண்டும் விவசாயத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.30 - 2025 - 2026 ஆம் ஆண்டிற் கான நூறு நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளும் உடனடியாக வழங்க வேண்டும்.  2024 - 2025 ஆம் ஆண்டு நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்களின் 8 மாத கூலி நிலுவையை சட்டப் படி வட்டியுடன் வழங்க  வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் உப்பிலிய புரம் ஒன்றியக்குழு சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. புதனன்று உப்பிலிய புரம் ஊராட்சி ஒன்றிய அலு வலக வளாகத்தில் நடை பெற்ற போராட்டத்திற்கு சங்க ஒன்றியச் செயலாளர் கணேசன் தலைமை வகித் தார். போராட்டத்தை மாநிலப் பொருளாளர் பழனிச் சாமி துவக்கி வைத்தார். போராட்டத்தை விளக்கி மாவட்டத் தலைவர் தெய்வ நீதி, சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பாண்டி யன், ஒன்றியச் செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய ஒருங் கிணைப்பாளர் டி. முத்து குமார் ஆகியோர் பேசினர்.