tamilnadu

img

பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை

பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை

அமைச்சர் சிவசங்கர் பேட்டி அரியலூர், ஜன.1 - பொங்கல் பண்டிகைக்கு பொது மக்கள் சிரமமின்றி பயணிக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் பேருந்து வசதி தேவைப்படும் ஊர்களுக்கு தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரி வித்தார். அரியலூர் மாவட்டம் திருமானூ ரில் புதிய பேருந்துகள் சேவை மற்றும் நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் பேருந்து சேவை, ஏலாக்குறிச்சியில் துணை மின் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டல் ஆகியவற்றை புதன் கிழமை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டியில், “கொரோனா கால கட்டத்துக்கு பிறகு அரசுப் பேருந்து களை நாடும் பயணிகளின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. மூன்று நாள் தொடர் விடு முறைக்குகூட தற்பொழுது சிறப்பு பேருந்துகளை இயக்கி, அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு  பயணிகள் எவ்வித சிரமமுமின்றி பய ணித்திட, கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை தயா ராகி வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து  நிலையத்திலிருந்து எந்தெந்த பேருந்து களை, எந்தெந்த பகுதிக்கு இயக்கு வது என்பது குறித்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி தேவைப்படும் இடங்களில் தனி யார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படை யில் எடுத்து, கடந்த ஆண்டு தீபாவளி, பொங்கல் பண்டிகைகளைப் போலவே  இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. புதிதாக இயக்கப்பட்ட வால்வோ  பேருந்துகளுக்கு மக்களிடையே சிறப்பான வரவேற்பு உள்ளது. கடன் வாங்குவதில் தமிழ்நாடு முத லிடம் என எடப்பாடி பழனிசாமி சொல்லி யிருக்கிறார். அவரது ஆட்சிக் காலத்தி லும் கடன் வாங்கப்பட்டுள்ளது. அவ ருக்கு முந்தைய ஜெயலலிதா ஆட்சி யிலும் கடன் வாங்கப்பட்டுள்ளது. ஒரு  மாநிலத்தின் சக்தி எந்த அளவு உள்ளது.  எவ்வளவு கடன் வாங்கலாம் என  ஒன்றிய அரசு குறியீடு வெளியிட்டு உள்ளது. நாம் அந்த குறியீட்டுக்கு குறை வாகத்தான் கடன் வாங்கியுள்ளோம். இவர்கள் ஒப்பிடும் பிற மாநிலங்கள் எல்லாம் அந்த குறியீட்டையும் தாண்டி  கடன் வாங்கி உள்ளனர். தேவைகளுக் காக கடன் வாங்குவது இயல்பான ஒன்றுதான்” என்றார். நிகழ்ச்சிகளில் ஆட்சியர் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினர்  கு.சின்னப்பா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரா.சிவராமன், அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் நிர்வாக இயக்குநர் க.தசரதன், திருச்சி  மண்டல பொது மேலாளர் டி.சதீஸ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.