கணவன் கொலையில் உடந்தையாக இருந்த கோழிப்பண்ணை உரிமையாளரையும் சேர்த்திடுக! மாவட்ட எஸ்.பி.யிடம் மனைவி மனு அளிப்பு
சிவகங்கை, மார்ச் 25- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி யில் மாதவன் என்ற தொழிலாளி கோழிப் பண்ணையில் அடித்து புதைத்த சம்ப வத்தில் உரிமையாளரின் பெயரையும் சேர்க்க வேண்டும் என்று மாதவனின் மனைவி பார்வதி காவல்துறை கண்காணிப்பாளரி டம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: எனது கணவர் கடந்த 17.3.2026 அன்று மாலை 6 மணியளவில், வீட்டிலிருந்து எஸ்.எஸ்.கோட்டைக்கு எனது தம்பிகள் ஜெய ராமன், பாலமுருகன் ஆகியோர் வர சொன் னதாக பார்த்துவிட்டு கூறி காவல்நிலையம் முன்புறம் உள்ள மணியின் கோழிப்பண் ணைக்கு சென்றார். அதன் பிறகு 2 நாட்க ளாக காணவில்லை என மார்ச் 18, 19 ஆகிய இரண்டு நாட்கள் தேடி அங்கு விசா ரித்தோம். மேலும், ஜெயராமன், பாலமுரு கன் ஆகியோரை விசாரித்தபோது வர வில்லை என்றும், பின்பு வந்து இருந்தார் காலையில் காணவில்லை என முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்தனர். அதன் பின் 20.3.2026 அன்று எஸ்.வி. மங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். மறுநாள் 21.3.2026 அன்று காலை 8 மணி யளவில் கோழிப்பண்ணை உரிமையாளர் மணி எனது தம்பிகளை அழைத்துக் கொண்டு, தேனம்மாள்பட்டியில் உள்ள என் வீட்டிற்கு வந்தார். அவர் என்னிடம் நீ கொடுத்த புகாரை திரும்ப பெறவேண்டும், பேசி முடித்துக் கொள்ளலாம் என்று கோபமாக என்னை அடிக்க வந்தார். அங் கிருந்த எனது மகள், மருமகன் ஆகியோரி டமும் புகாரை வாபஸ் வாங்குங்கள், இல்லாவிடில் உங்களை சும்மா விட மாட்டோம் என மிரட்டினார். அப்போது எனக்கு அவர்மீது எனது கணவர் காணாமல் போனதற்கு இவரும் காரணமாக இருப்பார் என்று எண்ணி, உட னடியாக எஸ்.வி. மங்களம் காவல்நிலை யம் சென்று மணி என்பவர் மீதும் எழுத்துப் பூர்வமாக புகார் கொடுத்தேன். பிறகு காவல்துறை விசாரணையில் எனது கணவர் கொலை செய்யப்பட்டு கோழிப்பண்ணை யில் புதைக்கப்பட்டிருந்தார் என்பது தெரிய வந்தது. கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எனது தம்பிகள் இருவர் மட்டுமே கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கோழிப்பண்ணை உரிமையாளர் மணி என்பவரும் உடந்தையாக இருந்துள் ளார் என கருதுகிறேன். ஆனால் அவரிடம் விசாரணை செய்யாமல், வழக்கில் சேர்க்கா மல், வெளியில் விட்டுவிட்டனர். எனவே மணி மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் மனு வில் கூறியுள்ளார். அவருடன் அனைத்திந்திய ஜனநாயக சங்க மாநிலக் குழு உறுப்பினர் சாந்தி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன், சிங்கம்புணரி தாலு காச் செயலாளர் காந்திமதி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து ராமலிங்கபூபதி ஆகியோர் சென்றிருந்தனர்.
