tamilnadu

img

ஸ்கேன் இந்தியா

ஆலிங்கனம்

திரிபுராவில் ஆளும் கூட்டணியில் உள்ள திப்ரா மோதாவில் இருந்து இரண்டாம் மட்டத் தலைவர்கள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வரு கிறார்கள். இடது முன்னணி ஆட்சிக் காலத்தில் உரு வாக்கப்பட்ட பழங்குடி சுயாட்சி மாவட்டக் கவுன்சிலுக் கான தேர்தல் வரவுள்ளது. அங்கு திப்ரா மோதா தனிப் பெரும்பான்மையுடன் அதிகாரத்தில் இருக்கிறது. பல்வேறு வழிகளில் அதைக்கைப்பற்ற பாஜக முயற்சித்து வருகிறது. இந்நிலையில் தான் திப்ரா  மோதாவின் முக்கிய தலைவரகளில் ஒருவரான குருபதா தேப்பர்மா பாஜகவில் இணைந்திருக்கிறார். தரப்பட்ட வாக்குறுதிகளைக் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை என்று திப்ரா மோதா மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார். வாக்குறுதிகள் நிறைவேறாததற்கு ஆளும் பாஜகவும்தானே காரணம் என்று கட்சிக்காரர்களே கேட்கிறார்கள். இருவரும் நாடகம் ஆடுகிறார்கள் என்கிறது எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

டிக்கெட்டுக்கு கிராக்கி

அமெரிக்காவின் சட்டவிரோதத் தாக்குதல்களால் உலகம் முழுவதும் எரிபொருட்களுக்குப் பெரும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் குஜராத் சட்டமன்றக் கூட்டத்தில் பாஜக உறுப்பினரான அரவிந்த் படேல், சர்வதேச டி-20 உலகக்கோப்பைக்கான இறுதி ஆட்டத்தைப் பார்க்க டிக்கெட் கிடைக்க வில்லை என்று புகார் செய்தார். அவருக்கு  மட்டுமல்ல, மேலும் பல சட்டமன்ற உறுப்பி னர்களுக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். இனிமேல் இப்படியெல்லாம் நடக்காது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதி கூறினார். இதேபோன்று, எரிவாயு உருளை கிடைக்காதவர்களுக்குக் கிடைக்கும் என்ற உறுதிமொழியை இந்த ஆட்சியாளர்கள் அளிக்கக்கூடாதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. எரிவாயு விநியோக மையங்களில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

வேலை வாங்கலியோ…

மத்தியக் காவல் படைகளில் கிட்டத்தட்ட ஒரு  லட்சம் பணியிடங்கள் காலியாக இருக் கின்றன. வெளிநாட்டவர் உள்ளே நுழைந்து விடு கிறார்கள் என்று மாநில அரசுகளைக் குறை சொல்லும் ஒன்றிய பாஜக ஆளும் அரசு, எல்லைப் பாதுகாப்புப் படையில் ஆயிரக்கணக்கான பணி யிடங்களை நிரப்பாமல் விட்டு வைத்துள்ளது. மத்தி யக் காவல் படைகளின் மொத்த எண்ணிக்கையில் 8.5 விழுக்காடு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தொழில் நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான இடங்களைப் பாது காக்கும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் 17.7 விழுக்காடு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்தப் பிரச்சனையைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பி வருகின்றன. காலக்கெடு நிர்ணயித்து நிரப்பி விடுவோம் என்கிறார்கள். ஆனால் இதுவரையில் அது நடக்கவில்லை.

கூடு மாறி கை வைத்த..

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் டானினோ,  1970களில் இந்தியாவுக்கு வந்தார். ஆன்மீகத்தால் கவரப்பட்டு இந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லிக் கொள்ளும் இவர் குஜராத்தில் கல்வி நிறுவனங்களோடு தொடர்புடையவராக இருந்து வருகிறார். வரலாற்றுப் பாடங்களை பாஜக வின் அரசியல் கருத்துகளுக்கு ஆதரவாக மாற்று வதில் நிபுணத்துவம் கொண்டவராக அறியப்படு கிறார். இவர்தான் ஆறாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் சிந்துசமவெளி நாகரீகத்தை, சிந்து-சரஸ்வதி நாகரீகம் என்று மாற்றியவரும் இவர்தான். நீதித்துறை யில் ஊழல் என்ற தலைப்பில் எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் ஆசிரியர் குழுவின் தலைவராக இருந்தவர். வைக்கக்கூடாது இடத்தில் கை வைத்து விட்டோமே என்று புலம்பிக் கொண்டி ருக்கிறார். இவரையும், குழுவில் உள்ள மற்ற இரண்டு பேரையும் ஒன்றிய, மாநில அரசுகள் பணிக்கு அமர்த்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது.