சிபிஎம் சேலம் மாவட்ட செயலாளராக ஏ.ராமமூர்த்தி தேர்வு
சேலம், ஜன.12- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சேலம் மாவட்டச் செயலாளராக ஏ. ராமமூர்த்தி தேர்வு செய்யப் பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை (ஜன.11) அன்று மாநிலக்குழு உறுப்பி னர் ஏ. குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாநி லச் செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் ஆகி யோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், கட்சி யின் சேலம் மாவட்டச் செய லாளராக ஏ. ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களாக ஏ. கலிய பெருமாள், எம். கனகராஜ், என்.பிரவீன் குமார், கே. ராஜாத்தி, வி. இளங்கோ, எஸ்.எம். தேவி, ஜி. கணபதி, ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் உட்பட 35 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.
