சென்னை,நவ.24- வங்கக் கடலில் உரு வான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித் துள்ளது. இது திங்கட்கிழமை (நவ. 25) காற்றழுத்த தாழ்வு மண்ட லமாக வலுப்பெறும் என்றும் அடுத்த 2 நாட்களில் தமிழ் நாடு-இலங்கை கடற்கரை யை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புய லாக மாறவும் வாய்ப்பு உள் ளது. அப்படி உருவானால் அதற்கு ‘பீன்ஜல்’ எனப் பெயர் சூட்டப்படும். இந்த நிலையில் தமிழகம் நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நவ. 25 முதல் நவ. 28-ஆம் தேதி வரை தமிழகத்தில் பெரும் பாலான இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, பூமத் திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் முதல் குமரிக் கடல் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ கத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நவ. 29- ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கனமழை எச்சரிக்கை நவ. 25-இல் மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களி லும், நவ. 26-இல் கடலூர், தஞ்சாவூர், திரு வாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நவ. 25 முதல் நவ.28-ஆம் தேதி வரை சென்னை முதல் ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நவ. 27, 28 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள காரணத் தால், நவ. 24, 25 ஆகிய தேதிகளில் மீன வர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.