கூகுளை விட மில்லியன் மடங்கு வேகமாக இயங்கும் கணினி
கூகுள் நிறுவனத்தில் ப்ராஸசரை விட மில்லியன் மடங்கு வேகமாக இயங்கும் Zuchongzhi 3.0 எனும் குவாண்டம் ப்ராஸசரை சீன ஆராய்ச்சிக் குழு உருவாக்கியுள்ளது. சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (USTC) ஆராய்ச்சிக் குழு, 105- qubit செமிகண்டக்டர் குவாண்டம் கணினியான Zuchongzhi-3 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கணினி 1,400 ஏ100 ஜிபியூ ப்ராஸசரை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. Zuchongzhi-3, மிகவும் சக்தி வாய்ந்த சூப்பர் கணினியை விட 10 மடங்கு வேகத்திலும், கூகுளின் சமீபத்திய 67- qubit Sycamore ப்ராஸசரை விட மில்லியன் மடங்கு வேகமாக இயங்கும் திறன் கொண்டது. குவாண்டம் கம்ப்யூட்டிங்கின் வாசிப்பு துல்லியம் மற்றும் கட்டுப் பாட்டு துல்லியத்தின் அடிப்படையில் இந்த கணினி புதிய உயரங்களை எட்டியுள்ளதாக USTC குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஜிமெயிலில் புதிய ஏஐ அம்சம்!
கூகுள் நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிகழ்வுகளை கூகுள் காலண்டரில் சேர்க்கும் (“Add to Calendar”) வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜிமெயிலில் மின்னஞ்சல் மூலம் பெறப்படும் முக்கிய விவரங்களின் அடிப்படையில், அந்த நிகழ்வுகளை பயனர்களின் கூகுள் காலண்டரில் சேர்க்கும் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) அம்சத்தை வரும் ஏப்ரல் மாதத்தில் கூகுள் அறிமுகம் செய்ய உள்ளது. மின்னஞ்சலில் வரும் நிகழ்வுகளை கூகுள் காலண்டரில் சேர்க்க பயனர்கள் அனுமதி வழங்க வேண்டும். ஆனால், காலண்டரில் சேர்க்கப்பட்ட நிகழ்வு களைத் திருத்தம் செய்ய முடியாது என்பது குறிப் பிடத்தக்கது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம் அறிமுகம்!
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிரெட்ஸ் ஆகிய தளங்களில் சமூக குறிப்புகள் (Community Notes) அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ் டாகிராம், டிரெட்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் தவறாக வழி நடத்தக் கூடிய அல்லது கூடுதல் தெளிவு தேவைப்படும் பதிவுகளில், அதன் சூழல் சார்ந்த தகவலை வழங்க சமூகக் குறிப்புகள் உதவுகிறது. ஒரு சார்பு நிலை பதிவுக்கு எதிரான உண்மைத் தன்மையைக் கூற, ஒரு சமூகக் குறிப்பை வெளி யிடுவதற்கு முன் பலதரப்பட்ட பங்களிப்பாளர்களால் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு சமூகக் குறிப்புக்கும் 500 வார்த்தைகள் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரமாக விளங்கக் கூடிய லிங்க்கையும் பங்களிப்பாளர் வழங்க வேண்டும். இருப்பினும், சமூகக் குறிப்பைத் தொடங்கியவரின் பெயர் காண்பிக்காது. இவை ஆங்கிலம், ஸ்பானிஷ், சீனம், வியட்நாம், பிரஞ்சு மற்றும் போர்ச்சுகீஸ் மொழிகளில் இருக்கும். கடந்த 2021-ஆம் ஆண்டு எக்ஸ் தளத்தில் அறிமுகம் செய்யப்பட்ட உண்மை சரிபார்ப்பு போலவே, மெட்டாவின் சமூகக் குறிப்புகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.