மதுரை:
மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பணன் மகன் வேல்முருகன் (54). இவர் தபால்தந்திநகரில் உள்ள “அலர்ட்” என்ற தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுத் தொழிலாளியாக கடந்த ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருக்கு அந் நிறுவனம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி ஒதுக்கீடு செய்திருந்தது. புதன்கிழமை பணி முடித்து வேல்முருகன் வீட்டிற்குச் செல்லவில்லை. வியாழக்கிழமை காலை ஆட்சியர் அலுவலகப் பணியாளர் ஒருவர் தண்ணீர் திறந்துவிடுவதற்காக மாடிக்குச் சென்றுள்ளார். அங்கு வேல்முருகன் கயிற்றில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்துள்ளார். தகவலறிந்த தல்லாகுளம் காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடைபெற்றுவருகிறது.