tamilnadu

நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாத பட்ஜெட்

ஒன்றிய அரசின் பட்ஜெட் நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் மு. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு மாநிலத்தின் வரி வருவாய்க்கு ஏற்ப நீதியான முறையில் வரி பங்கீடு நடத்தப்படவில்லை என்பதை இந்த நிதி நிலை அறிக்கை தெளிவுபடுத்துகிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அப்பட்டமாக ஓரங்கட்டிருப்பதை எளிதில் உணர முடிகிறது. தமிழ்நாட்டில் ஓடும் ரயில்கள்தான் இந்தியாவிலேயே அதிக லாபத்தை ஈட்டுகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது கண்டிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில்; பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு சாமானிய மக்களிடம் பணப்புழக்கமும் குறைந்து வரும் நிலையில்; இந்த பட்ஜெட் ஒரு சார்பானதாகவும், திருப்தியற்ற வகையிலும் இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்