வெறுப்புணர்வுக்கு எதிராக மாற்று சிந்தனையை விதைக்கும் நூல் - கே.பாஸ்கர்
அப்துல் ராஸிக் என் உற்ற தோழன். அவரது மனைவி ஜமீலா ராஸிக்கின் முக நூல் பதிவுகளை நான் படித்திருக்கி றேன். இவருக்கு நல்ல எழுத வரு கிறதே என்று நினைப்பேன். ராஸிக் என்னிடம் ஜமீலா எழுதிய “அது ஒரு பிறைக்காலம்” என்ற புத்தகத்தை கொடு த்து படிக்கச் சொன்னவுடன் எனக்கு பெரிய வியப்பேற்படவில்லை. ஜமீலா புத்தகம் போட தகுதியானவர் தான் என்பது எனது கருத்து. புத்தகத்தை முழுவதும் படித்தவுடன் எனக்கு ஒரே வியப்பு. இவ்வளவு விஷ யங்களை அவர் இவ்வளவு நாள் உள்ள டக்கி வைத்திருக்கிறாரா என்று ஒன்று. இன்னொன்று இவ்வளவு யதார்த்த மாக ஹாஸ்யத்துடன் கூடிய நடையில் எழுதியிருப்பது. மூன்றாவது, தான் பார்த்ததை, அனுபவித்ததை உள் வாங்கி அதை புறநிலை யதார்த்தத்து டன் எழுதிய பாங்கு. எவை ஒன்றும் கைதேர்ந்த எழுத்தாளர்களுக்கு கூட அமைவது கடினம். இவை எல்லாவற்றையும் விட எனக்கு சாதாரண முஸ்லிம் மக்களது வாழ்க்கை முறைகள் பற்றி ஒன்றுமே தெரியாது. அரசியல் ரீதியாக கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி களையும், வன்முறைகளையும் கடுமை யாக சாடியவன் நான். ஆனால், அவர்க ளது கலாச்சார நடைமுறைகள் எதுவும் தெரியாமலே இருந்தது. ஏரல் ஊரின் முஸ்லிம் மக்களின் அவர்களது மதம் சார்ந்த அதே நேரத்தில் தமிழ் மண் ணுக்கே உரிய எல்லா கலவைகளோ டும் வாழ்ந்த அவர்களது வாழ்க்கையை இவ்வளவு நேர்த்தியாக யாரும் வெளிக் கொணரமுடியாது.
ரம்ஜான் நோன்பு பழக்கவழக்கங்க ளில் ஆரம்பித்து இறுதிச் சடங்குகள் வரை முஸ்லிம் மக்களின் அந்யோய மான சமூக கட்டுக்கோப்புகளையும், அவர்களது கெட்டியான உறவுகளை யும் தன்னுடைய குடும்பம், ஏரல் தெருக் களில் வாழ்ந்த மற்ற குடும்பங்கள் வாயி லாக மிகப்பிரமாதமாக கொண்டுவந்தி ருக்கிறார் ஜமீலா. ஒவ்வொரு கட்டுரை யும் ஒவ்வொரு அனுபவம். ஒவ்வொரு அனுபவமும் முஸ்லிம் சமூகத்தின் வெவ்வேறு போக்குகள். எப்படி சில பழக்கவழக்கங்கள காலத்தின் மாற்றத் தால் மறைந்தன என்பதை மிகச் சுவை யுடன் ஜமீலா விவரித்திருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையையும் நான் அனுபவித்து படித்தேன். இப்படி வாசகர் படிப்பது தான் எழுத்தாளரின் வெற்றி. “ இந்த நாற்பது வருடங்களில் நம் வாழ்க்கை முறையெல்லாம் எப்படியோ மாறிவிட்டது. ஒவ்வொன்றாய் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது நாம் அவற் றை அதிகமாக உணர்வதில்லை.ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் பார்க்கும் போது ஒரே பாய்ச்சலாக பாய்ந்து மாறி யது போலத் தோன்றுகிறது. “ “இம்மி அரிசி துணயானும் வைக லும் நம்மில் இயைவ கொடுத் துண்மின்.” “அண்டை வீட்டான் பசித்திருக்கும் போது வயிறார உண்பவன் இறை நம்பிக்கையாளன் அல்லன்” இப்படி எண்ணற்ற மேற்கோள்க ளை நாம் கூறமுடியும். அவை நம்மை பிரமிக்கவைக்கின்றன.
இன்னும் இந்த புத்தகத்தை பற்றி எனக்கு நிறைய எழுத இருக்கிறது. அதற்கு நேரம் எடுக்கும் என்பதால் சுருக்கமாக முடித்துவிட்டேன். இந்த புத்தகம் ஒவ்வொரு சாதாரண இந்துவின் கையிலும் இருக்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளாக முஸ்லிம் மக்களின் மீது வெறுப்பு ணர்வை தொடர்ந்து விதைக்கும் இந்துத்துவா வெறியாளர்களுக்கு பதில் மாற்று சிந்தனையை ஜமிலாவின் “ அது ஒரு பிறைக்காலம்” தரும் என்ப தில் ஐயமில்லை. அதைபோலவே, இந்த புத்தகம் ஒவ்வொரு முற்போக்கு சிந்தனையுள்ள வர்களும் படிப்பது அவசியம். அரசியல் ரீதியாக இந்துத்துவா கருத்துகளுக்கு எதிராகபோராடுவது என்பது தனி. அது மட்டுமே அவற்றை தனிமைப்படுத்தாது. ஒவ்வொரு இந்து, சாதாரண முஸ்லிம் மக்களின் இந்திய தன்மையை கொண்டு செல்ல வேண்டிய கடமை முற்போக்காளர்களுக்கு இருக்கிறது. ஜமீலா அவர்களின் அது ஒரு பிறைக் காலம் கண்டிப்பாக அதற்கு உதவும் என்று நம்புகிறேன்.
நூல்: அது ஒரு பிறைக்காலம்
ஆசிரியர்: ஜமீலா ராசிக்
வெளியீடு: ஹெர் ஸ்டோரீஸ், சென்னை
விலை: ரூ.300,
பக்கம்: 206
வரலாற்றின் மறைந்த பக்கங்கள்
சு.வெங்கடேசன் அவர்களின் புதிய நூல், பன்னிரெண்டு தனித்துவமான கட்டுரைகளில் நம் வரலாற்றின் மறைந்துபோன பக்கங்களை ஆவணப்படுத்துகிறது. பாளையக்காரர்கள் பயன் படுத்திய வளரி ஆயுதம், ‘போக்கிரி’ என அழைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் வரலாறு, காசி முதல் இராமேஸ்வரம் வரையிலான பழைய கால பய ணங்கள், புகையிலையின் வரலாறு, மாட்டுச்சந்தை வியாபாரிகளின் குழூ உக்குறி மொழி, நூறு ஆண்டுக ளுக்கு முந்தைய சமையல் கலை என பல்வேறு தளங்களில் நகரும் இந்நூல், ஒவ்வொரு கட்டுரையிலும் வரலாற்று ஆவணங்களின் துணையுடன் ஆழமான ஆய்வை முன்வைக்கிறது. இன்றைய தலைமுறை தங்கள் வேர்களை அறிந்து கொள்ள உதவும் முக்கியமான பதிவு இந்நூல். ஒவ்வொரு கதை யின் பின்னணியிலும் வரலாற்று நிகழ்வுகளும் ஆதாரங்க ளும் இணைந்து வாசகரை வரலாற்றுப் பயணத்திற்கு அழைத்துச் செல்கின்றன.
வினோத் குமார்
நூல் : கதைகளின் கதை
ஆசிரியர்: சு.வெங்கடேசன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பக்கங்கள்: 128, விலை : ரூ.175
தனித்து வாழும் பெற்றோரின் உணர்வுப் பதிவுகள்
பிருந்தா சேது அவர்களின் அனுபவக் குறிப்புகள், ஒற்றைப் ெற்றோர் மீதான சமூகப் பார்வையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. குழந்தைப் பருவத்தில் வன் முறையைப் பார்த்து வளர்ந்தவர்கள், திருமண வாழ்வில் அடிபணிந்து போவதோ அல்லது ஆதிக்கம் செலுத்துவதோ இயல்பாகிறது என்ற உளவியல் உண்மையை ஆழமாக ஆராய்கிறார். காதல் வாழ்வை இழந்து விடுவோமோ என்ற அச்சம். மதங்கொண்ட யானையின் பலத்தைக் கொடுக்கிறது என்கிறார். தமிழக அரசின் விருது பெற்ற இந்நூல், ஒற்றைப் பெற்றோர்களின் வலிகள், போராட்டங்கள், வெற்றிகள் என அனைத்தை யும் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தும் முக்கியமான ஆவணம்.
நூல் விவரம்: கதவு திறந்ததும் கடல்
ஆசிரியர்: பிருந்தா சேது
வெளியீடு: ஹெர் ஸ்டோரீஸ், சென்னை
விலை: ரூ.160
தொடர்புக்கு: 7500098666
புற்றுநோய்க்கு எதிரான குழந்தைகளின் போராட்டம் - எம்.ஜே.பிரபாகர்
“ரத்தத்துக்கு மதமில்லை, ஜாதியில்லை” - என்ற மானுட நேயத்தின் குரலாக ஒலிக்கிறது இந்நூல். திருவனந்தபுரம் ரீஜனல் கேன்சர் சென்டரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் போராட்டத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. மலையாள மொழியில் கே.ராஜேந்திரன் எழுதிய இந் நூலை, சாகித்திய அகாடமி விருது பெற்ற யூமா வாசுகி தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ரத்த புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட இந்நூல், மருத்துவமனை அனுப வங்களை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்கிறது.
நூல்:
ஆர்.சி.சி.யில் அற்புதக் குழந்தைகள்
மூல நூலாசிரியர்: கே.ராஜேந்திரன்
தமிழாக்கம்: யூமா வாசுகி
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
விலை: ரூ.80
தொடர்புக்கு: 044-24332424
வள்ளுவரின் காதல் பார்வை - எம்.ஜே.பிரபாகர்
திருக்குறளின் காமத்துப்பால் பகுதியை புதுக்கவிதை வடிவில் படைத்திருப்பது இரா.ராஜாராமின் தனித்துவம். பல்வேறு உரையாசிரியர்கள் திருக்குறளுக்கு உரை எழுதியி ருந்தாலும், கவிதை வடிவில் உரை எழுதிய முதல் முயற்சி இது. அதிகாரம் 109 முதல் 133 வரை யிலான குறட்பாக்களை நவீன கவிதை நடையில் விளக்கியுள்ளார். காதலர்களின் கண்ணோட்டம், கூடல், பிரிவு, மீட்சி என காதல் உணர்வுகளின் பல்வேறு நிலைகளை வள்ளுவரின் பார்வையில் நுட்பமாக வெளிப் படுத்துகிறது.
நூல் : “அவனும் அவளும்
வள்ளுவன் குறளும்”
ஆசிரியர்: இரா.ராஜாராம்
வெளியீடு: பனுவல் புத்தக நிலையம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9788799544