tamilnadu

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9.14 லட்சம் பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9.14 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, ஜன.5 - தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டி யல் கடந்த டிச.19 ஆம் தேதி வெளி யிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்கா ளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அவர் களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்ற வர்களாக காட்டப்பட்டு உள்ளனர். தற்போது வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழகத்தில் கடந்த  இரு நாட்களாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடை பெற்றது. இதில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத வர்கள் ஆர்வமுடன் படிவங்களை அளித்த னர். புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்ப வர்கள் பிறப்புச் சான்றிதழ் அல்லது கல்விச் சான்று, ஆதார் அட்டை, 2005 ஆம் ஆண்டுக்கான பெற்றோர் வாக்கா ளர் அடையாள அட்டையின் விவரங் களை சமர்ப்பித்தனர்.  தமிழகத்தில் 4  நாட்கள் நடந்த முகாம் நிறை வடைந்துள்ளது. இதில் கடந்த டிச. 19 ஆம் தேதியிலிருந்து, ஜன.3 ஆம் தேதி இரவு 8 மணி வரை 18 வயது நிரம்பிய தகுதியுடைய 9 லட்சத்து 14 ஆயிரத்து 931 பேர் படிவம் 6, 6ஏ அளித்தனர். ஜன.18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.