7 மசோதாக்கள் சட்டப் பேரவையில் அறிமுகம்
சென்னை, ஏப்.28 - அறிவியல் சார் நிலவரைபட அடிப்படையில் தீயணைப்பு நிலை யங்கள் அமைத்தல், தாமத வரிக் கான அபராத வட்டி குறைப்பு உள்ளிட்ட 7 சட்ட மசோதாக்கள் திங்க ளன்று (ஏப்.28) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் தொழில் புரி தலை எளிதாக்கும் வகையில், கடை கள் மற்றும் நிறுவனங்கள் தொடர் பான தொழிலாளர் சட்டங்களில் இணக்கம், சுமை குறைப்பு ஆகி யவை அடையாளம் காணப்பட்டு உள்ளது. இதன்படி, சிறை உள்ளிட்ட கடும் தண்டனைகளை குறைத்தல், தண்டத்தொகை அறி முகம் செய்தல் உள்ளிட்டவற்றுக் காக தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதாவை சிபிஎம் சட்டமன்றக் குழுத் தலைவர் வி.பி. நாகை மாலி ஆரம்ப நிலையி லேயே எதிர்ப்பதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, டி.ராமச்சந்திரன் (சிபிஐ), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), தி.வேல்முருகன் (தவாக), ஜி.கே. மணி (பாமக) அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக), ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) ஆகியோர் கருத்துகள், ஆலோச னைகள், திருத்தங்களை கூற விரும்புவதாக தெரிவித்தனர். சொத்து வரி குறைக்க முடிவு தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த 2021 பட்ஜெட் அறிவிப்பின் படி, தீ தடுப்புக்கான செயல் பாட்டு நேரத்தை குறைக்க, அறிவி யல் சார் நில வரைபடம் அடிப்படை யில் புதிய தீயணைப்பு நிலை யங்கள் அமைவிடங்கள் ஏற்படுத்து வது தொடர்பாக, தீயணைப்புத் துறை சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக, சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். மேலும் தொழில் தொடங்கு வதை எளிதாக்க, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங் கப்பட்ட வணிக, தொழில் உரி மங்கள் வழங்குவதற்கான விதி முறைகளை எளிமைப்படுத்த உத் தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சொத்து வரி நிலுவைத் தொகையை தாமதமாக செலுத்துவதற்கான வட்டி விகிதத்தை ஒரு சத வீதத்தில் இருந்து அரை சதவீதமாக குறைக்கவும் அரசு உத்தேசித்து உள்ளது. அவற்றை செயல்ப டுத்தும் வகையில், நகர்ப்புற உள் ளாட்சி சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்தார். அனுமதியின்றி விளம்பர பலகை வைக்க முடியாது அதே போல், ஊரக உள்ளாட்சி களில் விளம்பரப் பலகைகள், மின்னணு திரைகள், விளம்பர அட்டைகள் நிறுவுவதை முறைப் படுத்தும் வகையில் சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் ஐ.பெரிய சாமி அறிமுகம் செய்தார். இது தவிர, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் போக்குவரத்து திட்டமிடலை ஒருங் கிணைக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்தின் (கும்டா) உறுப்பி னர் செயலாளரை, சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) பதவி வழி செயலராக சேர்க்க முடிவு செய்து, நகர ஊர மைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வ தற்கான மசோதாவை அமைச்சர் சு.முத்துசாமி தாக்கல் செய்தார். அசல் உரிமை மூல ஆவணம் சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தில், 55 ஆவது ஜிஎஸ்டி மன்றத்தின் 55 ஆவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு களின் அடிப்படையில், திருத்தம் மேற்கொள்வதற்கு சட்ட மசோதா, ஆவணப் பதிவின்போது மோசடி, போலி ஆவணம், ஆள்மாறாட்டம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், அசல் உரிமை மூல ஆவணத்தை பதிவின் போது தாக்கல் செய்வதை வலியுறுத்தும் சட்ட மசோதாவை அமைச்சர் பி. மூர்த்தி தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, செவ்வா யன்று இந்த சட்ட மசோதாக்கள் மீது உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, பிரிவு வாரியாக ஆய்வு செய்து, நிறைவேற்றப்பட உள்ளது. கும்பகோணத்தில் கலைஞர் பல்கலை. கும்பகோணத்தில் பல்கலைக் கழகம் ஒன்றை நிறுவி அமைப்ப தற்கு வழிவகை செய்வதற்கான சட்ட முன்வடிவை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழி யன் தாக்கல் செய்தார். இதில், கும்ப கோணத்தில் நிறுவப்பட உள்ள கலைஞர் பல்கலைக்கழகமானது, அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சா வூர், திருவாரூர் ஆகிய மாவட்டங் களுக்கு உட்பட்ட எல்லைகளைக் கொண்டு செயல்படும். பல்கலைக்கழகத்தின் வேந்த ராக முதல்வர் இருப்பார். அவர் தனது பதவியின் காரணத்தால், பல்கலைக்கழகத்தின் தலைவராக இருப்பதுடன், பட்டமளிப்பு விழா போன்றவற்றுக்கு தலைமை வகித்து, பட்டங்களை வழங்கு வார். உயர்கல்வித் துறையை பொறுப்பில் கொண்டுள்ள அமைச்சர், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக இருப்பார். வேந்தர் இல்லாதிருக்கும் போது அல்லது வேந்தர் செயல்பட இய லாதிருக்கும் போது இணை வேந்தரே வேந்தருக்கான அனைத்து அதிகாரங்களையும் செலுத்தி கட மைகளை ஆற்றுதல் வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக் கழகத்துக் கான துணைவேந்தர் நியமனம் என்பது, அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைக்கும் மூன்று பெயர் களில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார். வேந்தரால், துணைவேந்தர் நியமனம் செய்யப் பட வேண்டும். துணைவேந்தரே பல்கலைக்கழகத்தின் கல்வித் தலைவராகவும், முதன்மை நிர்வாக அலுவலராகவும் இருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தை உருவாக்கும் சட்டமானது அரசித ழில் வெளியிடப்படும் தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள் துணைவேந்தர் நியமிக்கப்படுவார். பாரதிதாசன் பல்கலைக்கழகத் தில் இருந்து பிரிக்கப்பட்டு, கும்ப கோணத்தில் புதிதாக கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்கப்படு கிறது. பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பட்டத் தேர்வுக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான குறிப்பிட்ட காலப் படிப்புகளும், கல்லூரிகளும் கலைஞர் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளாகக் கொள்ளப்படுதல் வேண்டும். பாரதிதாசன் பல்கலைக் கழகமானது, திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ள டக்கியும், கலைஞர் பல்கலைக் கழகமானது அரியலூர், நாகப்பட்டி னம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த சட்ட மசோதாக்கள் அனைத்தும் குரல் வாக்கெடுப்பு மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மீது செவ்வாயன்று (ஏப்.29) உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப் பட்டு, பிரிவு வாரியாக ஆய்வு செய்து நிறைவேற்றப்படுகிறது.