மதுரையில், பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் 4 குழந்தைகள் கண் பார்வை இழந்துள்ளதாக அரவிந்த் கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 31 முதல் நவம்பர் 3-ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட காயம் மற்றும் கண் பிரச்சனைகள் காரணமாக மொத்தம் 104 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் 10க்கும் மேற்பட்டோருக்கு கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கருவிழியில் பாதுப்பு ஏற்பட்டிருந்த 4 குழந்தைகளுக்கு கண்கள் அகற்றப்பட்டு, அவர்கள் பார்வை இழந்துள்ளதாக அரவிந்த் கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது.