court

img

உ.பி மதரசா கல்விச் சட்டம் செல்லும் - உச்சநீதிமன்றம்

உத்தரப்பிரதேச அரசு கடந்த 2004-இல் கொண்டு வந்த மதரசா கல்விச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு
உத்தரப் பிரதேசத்தில் 2004ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மதரசா கல்விச் சட்டம், சட்ட விரோதமானது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி அதனை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 22-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், மதரசா கல்விச் சட்டத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் தவறாகப் புரிந்துகொண்டுள்ளது; மதராசாக்களை ஒழுங்குபடுத்த உத்தரவு பிறப்பிக்கலாமே தவிர, மதரசா கல்விச் சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரப்பிரதேச அரசு கடந்த 2004-இல் கொண்டு வந்த மதரசா கல்விச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.