tamilnadu

img

தேனி அருகே கார் - வேன் மோதிய விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 3 பேர் பலி

தேனி, டிச.28- தேனி மாவட்டம், பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே கார்-சுற்றுலா வேன் பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது,இதில் கேரளாவைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கேரள மாநிலம் கோட்டயம் அருகே குருவிலாங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயின்ட்தாமஸ்(34). இவர் தனது நண்பர்களான சோனி மோன்(43), ஜோபின்தாமஸ்(34), ஷாஜி(46) ஆகியோருடன் வேளாங்கண்ணி சென்று விட்டு காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டி ருந்தார். தேனி மாவட்டம் தேவதானப் பட்டி காட்ரோடு அருகே வந்த போது தேனியில் இருந்து ஏற்காடு சென்ற சுற்றுலா வேனுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் இருந்த ஜெயின்ட்தாமஸ், சோனிமோன், ஜோபின்தாமஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஷாஜி  பலத்தக் காயத்துடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார்.  சுற்றுலா வேனில் பயணித்த தேனி யைச் சேர்ந்த செல்வகுமார்(44), சத்யா(36), சியாமளா(37), குரு பிரசாத்(17) உள்ளிட்ட 18 பேர் காயங் களுடன் வத்தலக்குண்டு, பெரிய குளம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.  இச்சம்பவம் குறித்து  தேவதானப்பட்டி காவல்நிலை யத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.