சென்னை,பிப்.2- தமிழ்நாட்டில் ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. இது இந்தியாவிலேயே மிக அதிகம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்து டன் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீ காரம் வழங்கப்படுகிறது. சதுப்பு நிலங்கள் என்பது கடல் மட்டத்திலிருந்து ஆறு மீட்டர் களுக்கு குறைவான ஆழம் கொண்ட பல்வேறு வகைப்பட்ட சூழல் தன்மைகளைக் கொண்ட நீர் நிலைகளாகும். நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க, நிலத்தடி நீரின் உப்புத்தன்மையை குறைக்க, வெள்ளத்தைக் கட்டுப்படுத்த, உயரும் கடல் நீரை உள்வாங்க, மாசு மற்றும் திடக் கழிவுகளைக் கட்டுப்படுத்த,வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க சதுப்புநிலங்கள் மிக முக்கியமானது.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலை தளத்தில், “உலக ஈரநிலங்கள் நாளான இன்று, இராமநாதபுரம் மாவட்டம் சக்கரக் கோட்டை மற்றும் தேர்தங்கல் பறவைகள் காப்பகங்கள் புதிய ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தியைப் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இத்துடன், தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை இந்தியா விலேயே மிக அதிகமாக 20-ஆக உயர்ந்துள் ளது. இவற்றில் 19 இடங்கள் நாம் 2021-இல் தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் தொடங்கிய தற்குப் பிறகு ராம்சர் பகுதிகளாக அறி விக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரநிலங்களைப் பாதுகாப்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. வளமான நமது இயற்கை மரபைக் காக்க மேலும் பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.