tamilnadu

கனடாவில்  இந்திய மாணவர்கள்  2 பேர் சுட்டுக்கொலை பஞ்சாப் மாநிலம் பரே கிராமத்தைச்

கனடாவில்  இந்திய மாணவர்கள்  2 பேர் சுட்டுக்கொலை பஞ்சாப் மாநிலம் பரே கிராமத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் (27) மற்றும் சைதேவாலா கிராமத்தைச் சேர்ந்த  ரன்வீர் சிங் (18) ஆகியோர் உயர்கல்வி யைத் தொடர கனடா நாட்டிற்குச் சென்றி ருந்தனர். குர்தீப் ஏற்கனவே படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக காத்தி ருந்த நிலையில், ரன்வீர் மட்டும் படித்து  வந்தார். இந்நிலையில், சனியன்று இரவு இரு வரும் நண்பரின் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றுள்ளனர். அப் போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட தில் குர்தீப் சிங், ரன்வீர் சிங் ஆகிய இரு வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். இந்த தகவலை குர்தீப்பின் நண்ப ரான அர்ஷ்தீப் சிங் அவர்களின் குடும்  பத்தினருக்கு தெரிவித்துள்ளார். கனடா வில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இந்திய  மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப் பட்டுள்ளது அந்நாட்டில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.