tamilnadu

img

வானிலை ஆய்வுத் துறையின் 150வது ஆண்டு விழா

சென்னை, ஜன. 9- இந்திய வானிலை ஆய்வுத்துறையின் (ஐஎம்டி) 150வது ஆண்டு விழா சென்னையில்  புதன்கிழமை (ஜன.8) சிறப்பாக கொ ண்டாடப்பட்டது.  சென்னை வானிலை ஆய்வுமையமும் கொளத் தூர் எவர்வின் பள்ளியும் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். மக்களுக்கு வானிலை தொடர்பானத் தகவலை அளித்து லட்சக்கணக்கான உயிர்களையும், அவர்களது உடைமைகளையும் இந்திய வானிலை ஆய்வுத்துறை  பாதுகாத்து வருகிறது. வானிலை ஆய்வு துறையின்   80ஆம் ஆண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் சென்னை வானிலை மையம் இதற் கான ஏற்பாடுகளை எவர் வின் பள்ளிக் குழுமத்து டன் இணைந்து செய்தது. விழாவை ஒட்டி மாண வர்களின் ஊர்வலம் IMD 150 என்கிற வடிவமைப்பு, கண்காட்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  முன்னதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை பிரத்தியேகமாக உரு வாக்கிய பாடலுக்கு ஏற்ற படி மாணவிகள் நடனம் ஆடினர். மேலும் 2,000 மாணவர்கள் இணைந்து IMD 150 என்ற வடிவமைப்பை பிரமாண்டமாக உருவாக் கினர். இதில் அழகிய வான வில், மழைத்துளிகள் என கூடுதல் வடிவமைப்பும் இருந்தது. இது தவிர 25 உயர்வகுப்பு மாணவிகள் தங்கள் முகம் மற்றும் கைகளில் IMD 150, RMC 80 (மண்டல வானிலை ஆய்வு மையம் சென்னை)  போன்ற வற்றை வரைந்து அசத்தி னர். இவ்விழா தொடர்பாக “இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150 காலப் பயணம்” என்ற தலைப்பில் 25 அரிய தகவல்கள் அடங்கிய கண்காட்சியும் இடம்பெற்றது. இதை ஆயிர க்கணக்கான மாணவர்கள் பார்த்து வியந்தனர். மேலும் சென்னை வானிலை மையம் பிரத்யேகமாக கொண்டு வந்திருந்த “வானிலை ஆய்வு நிலையம்” என்ற கண்காட்சியும், வானிலை யைக் கண்டறியும் உபகர ணங்கள் உள்ளிட்ட பொருட் கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன. இறுதியாக 400 மாணவ மாணவிகள் IMD 150 டி-ஷர்ட் மற்றும் IMD 150 தொப்பி அணிந்து பிரதான சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வானிலை விவரங்கள் அடங்கிய பதா கைகளை ஏந்தி நடை பயணம் மேற்கொண்டனர். விழாவில் சென்னை வானிலை மையத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள், எவர் வின் பள்ளிக்குழும சிஇஓ மகேஸ்வரி, மூத்த முதல்வர் புருஷோத்தமன், இயக்கு நர்கள் வித்யா, முரளி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.