tamilnadu

12 மணி நேர வேலை அறிவியலுக்கு, இயற்கைக்குப் புறம்பானது

12 மணி நேர வேலை  அறிவியலுக்கு, இயற்கைக்குப் புறம்பானது 

டிஆர்இயூ கருத்தரங்கில் அ.சவுந்தரராசன் சாடல்

சென்னை, ஜூலை 24- 12 மணி நேர வேலை என்பது அறிவி யலுக்கு, இயற்கைக்குப் புறம்பானது என்று டிஆர்இயூ கருத்தரங்கில் அ.சவுந்தரராசன் தெரிவித்தார். ரயில் பயணிகளின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண்டும்,  உற்பத்தி தொழிற்சாலைகள் உட்பட ரயில்வேயின் அனைத்து பிரிவுகளிலும் தனியார்மயம், அவுட்சோர்சிங் முறையை  கைவிட வேண்டும், அனைத்து காலி  பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி டிஆர்இயூ சார்பில்  சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசு கையில், ரயில்வே இருப்புப் பாதை,  சிக்னல் பராமரிப்பு, தொழிலாளர் களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக  அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.  விபத்துக்கான காரணங்களை கண்ட றிந்து சீர்செய்வதற்கான எந்த நட வடிக்கையையும் அரசு மேற்கொள்வ தில்லை. காரணங்களை கண்டறியா மல் இருப்பதால் விபத்துகள் அதி கரித்துக் கொண்டே இருக்கும். பொதுத்துறை நிறுவனங்களில் தொழிலாளர்கள் ஒழுங்காக வேலை செய்ய மாட்டார்கள், ஊழல் நிறைந்திரு க்கிறது எனக் கூறி தனியார்மயத்தை ஊக்குவித்தார்கள். அப்படித்தான் ஏர் இந்தியா, டாடா நிறுவனத்திடம் வழங்கப் பட்டது. தற்போது மாதத்தில் 10 முறை மேலே சென்றவுடன் கீழே இறங்கி விடுகிறது. கடந்த மாதம் அகமதா பாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.  அண்மையில் மேலே சென்ற விமானம்  சிறிது நேரத்திலேயே கீழே இறங்கிய வுடன் தீப் பிடித்து எரிந்தது. இதுதான் தனி யார் நிறுவனங்களின் இன்றைய நிலை. ஏனென்றால் லாபம் மட்டுமே அவர்க ளது குறிக்கோள். அதற்காக பாதுகாப்பு உள்ளிட்ட எதை வேண்டுமானாலும் சமரசம் செய்து கொள்வார்கள். தனி யார் நிறுவனங்களை பொறுத்தவரை நிரந்தரத் தொழிலாளர்கள் என்பதே இருக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களையும் இன்றைய ஆட்சியாளர்கள் தனியார் துறையை போலவே நடத்துகிறார் கள். பாதுகாப்பு குறித்து அரசு கவலை ப்படுவதில்லை. தற்போது படிப்படி யாக ரயில்வேயை தனியார்மயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ரயில்வே முழு மையாக தனியார்மயமானால், சாதாரண ஏழை எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியாது. இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சலுகை கள் பறிபோகும். பயணிகளின் பாது காப்புக்கு எந்த உத்தரவாதமும் இருக் காது. ஒப்பந்த முறை, அவுட் சோர்சிங் முறை என்பது ஒரு தொழிலின் உற்பத் ்தியை, தொழிலாளர்களின் திறமையை அழித்து விடும் போன்ற பாதிப்புகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி அவர்க ளையும் தனியார்மயத்திற்கு எதிராக அணி திரட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தற்போது 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரமாக உயர்த்தப் போகிறோம் என்று புதிய சட்டம் கொண்டு வருகிறார்கள்; சில மாநிலங்களில் அமல்படுத்தியும் விட்டார்கள். இது அறிவியலுக்கு, இயற்கைக்கு எதிரானது. பல ஆண்டு கள் தொடர்ச்சியாக பல நாடுகளில் நடந்த போராட்டத்தின் விளைவாக கொண்டு வரப்பட்டது தான் 8 மணி நேர வேலை சட்டம். முதலாளிகளின் லாப வெறிக்கு எதிராக, உழைப்பு திருட்டுக்கு  எதிராக பெற்ற மிகப்பெரிய வெற்றி தான் 8 மணி நேர வேலை. அதனால் தான் இதை உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். முதலாளிகளின்  லாபம் வேலை நேரத்தோடு தொடர்பு டையது. அதனால்தான் முதலாளிகள் வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். முதலாளிகளின் கோர முகம் தற்போது அம்பலமாகிக் கொண்டி ருக்கிறது. எனவே சாதி, மதம், இனம், மொழி கடந்து இந்த 12 மணி நேர வேலை  என்பதை தடுக்கவும், ஒன்றிய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத, முத லாளிகள் ஆதரவுக் கொள்கைக்கு எதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் அ.சவுந்தரராசன் கேட்டுக் கொண்டார். இதில் சங்கத்தின் தலைவர் ஜி.சுகு மாறன், செயல் தலைவர் அ.ஜானகி ராமன், பொதுச்செயலாளர் வி.அரி லால், ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் செயல் தலைவர் பா.ஜானகி ராமன், லேபர் யூனியன் பொதுச்செய லாளர் ராஜீப்குப்தா, இந்தியன் ரயில்வே டெக்னிக்கல் சூப்பர்வேஷன் அசோசியேஷன் அகில இந்திய பொதுச்செயலாளர் ரமேஷ், லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேஷன் தலை வர் குமரேசன், செல்வ விநாயகம், விஜயா (ஆர்.எல்.எல்.எப்) ஆகியோ ரும் பேசினர். இதில் சிஐடியு மூத்த தலை வர்கள் டி.கே.ரங்கராஜன், ஏ.கே.பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.