tamilnadu

img

இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நிய முதலீடு நிதிப் பாதுகாப்பிற்கு ஆபத்து அணுமின் உற்பத்தியில் தனியாருக்கான அனுமதி பேரழிவை ஏற்படுத்தும்!

இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நிய முதலீடு நிதிப் பாதுகாப்பிற்கு ஆபத்து அணுமின் உற்பத்தியில் தனியாருக்கான அனுமதி பேரழிவை ஏற்படுத்தும்!

ஒன்றிய பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை

புதுதில்லி, டிச.13- அணுசக்தி மின் உற்பத்தித் துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதற்கும், இன்சூரன்ஸ் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டிருப்பதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசி யல் தலைமைக்குழு வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: அணுசக்தி மின் உற்பத்தியில், தனியார் மற்றும் வெளிநாட்டு நிறு வனங்களின் நுழைவை அனுமதிக் கும் ஒன்றிய அமைச்சரவையின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அரசியல் தலைமைக் குழு  எதிர்க்கிறது. இன்சூரன்ஸ் துறை யில் 100 சதவிகித நேரடி வெளிநாட்டு  முதலீட்டை (FDI) அனுமதிக்க அமைச் சரவை எடுத்த முடிவையும் நிரா கரிக்கிறது. ஒன்றிய அமைச்சரவை, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 1962-ஆம் ஆண்டு, ‘அணுசக்தி சட்  டம் (Atomic Energy Act, 1962)’ மற்  றும் 2010-ஆம் ஆண்டு ‘அணுசக்தி  சேதங்களுக்கான சிவில் பொறு ப்புச் சட்டம்- (The Civil Liability for  Nuclear Damage Act - CLNDA)  2010’ ஆகியவற்றைத் திருத்த முடிவு  செய்துள்ளது. முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தங்கள், வெளிநாட்டு தொழில்நுட்பம் மற்றும் உபகர ணங்களை வழங்கும் நிறுவனங்கள் உட்பட தனியார் நிறுவனங்களின் நுழைவை அனுமதிக்கும் நோக் கம் கொண்டவைகளாகும். அணுசக்தி போன்ற மிக முக்கி யமான துறையை தனியார் நிறு வனங்களுக்குத் திறந்து விடுவதும்,  தாரை வார்ப்பதும் பேரழிவை ஏற்  படுத்தும். இந்தத் திருத்தங்கள், தனி யார் அணுசக்தி நிறுவனங்கள் உற் பத்தி செய்யும் மின்சாரத்திற்கான கட்டணங்களை, அவர்கள் இஷ்டத் திற்கு தீர்மானிப்பதற்கு முழுச் சுதந்  திரத்தை அளிக்கின்றன. அணுசக்தி சேதங்களுக்கான சிவில் பொறுப்புச் சட்டத்தில் செய்  யப்படும் திருத்தம் ஆபத்தானது, ஏனெனில் இது அணுசக்தி விபத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டைக் குறைக்கிறது. ‘விபத்துகள் மற்றும்  பிற விரும்பத்தகாத சம்பவங்க ளுக்கு தனியார் உற்பத்தியாளர்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை’ என்று அவர்களை பொறுப்பிலி ருந்து தப்பவிடும் வகையில், அமெ ரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து, ஒன்றிய அரசாங்கம் இந்தச் சட்டத்தைத் திருத்துகிறது. இது, தனியார் நிறுவனங்களின் ஓர் இரட்டை லாபத்திற்கு வழி வகுக்கிறது. அதாவது, தனியார் நிறு வனங்கள் விபத்துகளுக்குப் பொறுப்பேற்கவும் மாட்டார்கள், கட்டணங்களைத் தீர்மானிப்பதில் ஒழுங்குமுறை மேற்பார்வைக்கு கட்டுப்படவும் மாட்டார்கள். இது  பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணியின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாகும். இன்சூரன்ஸ் துறையில் 100 சத விகித நேரடி வெளிநாட்டு முத லீட்டை அனுமதிப்பதும், உள்நாட்டு இன்சூரன்ஸ் துறையை நிலை குலையச் செய்யும். இது பாலிசி தாரர்களின் தனியுரிமை மற்றும் நிதிப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும். வெளிநாட்டு முத லீட்டாளர்களின் வணிக முன்னுரி மைகள் பொது நல நோக்கங்களை முறியடிக்கும். இது நிதி நிலைத் தன்மை மற்றும் சமூகப் பாது காப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். இந்த நடவடிக்கை கொள்ளையடிப்பதற்கும் கையகப்படுத்துதல்களுக்கும் வழிவகுக்கிறது, இதன் விளை வாக முக்கிய தேசிய வளங்கள் மீதான கட்டுப்பாடு பறிபோகும். நாட்டின் நலன்களைப் பாதுகாக்  கும் வகையில், இந்தத் திருத்தங் களை எதிர்த்துப் போராடுமாறு சமூ கத்தின் அனைத்து ஜனநாயகப் பிரி வினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அழைப்புவிடுக்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்  குழு அறிக்கையில் கோரியுள்ளது. (ந.நி.)