tamilnadu

img

நடப்பாண்டில் 10 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி நியமனம்

நடப்பாண்டில் 10 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி நியமனம்

டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி

சென்னை, ஜூலை 12 - தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர் வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வுகள் சனிக்கிழமை (ஜூலை 12)  நடைபெற்றது. கிராம நிர்வாக அலு வலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்,  சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பா ளர், வனக்காவலர் போன்ற 3,935 காலிப் பணியிடங்களுக்கு இந்த தேர்வு  நடத்தப்பட்டது. இந்த தேர்வை மொத்தம் 13,89,738 பேர் எழுதினர். தமிழ்நாடு முழு வதும் உள்ள 38 மாவட்டங்களில் 4,922  மையங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 311 மையங்க ளில் தேர்வு நடந்தது. சென்னை எழும்பூர் மையத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபா கர், “இந்த தேர்வு முடிவுகள் அடுத்த மூன்று மாதங்களில் வெளியிட நட வடிக்கை எடுத்து வருகிறோம். தமிழ் நாடு அரசின் பல் வேறு துறைகளில் இந்த ஆண்டு மொத்தம் 10 ஆயி ரம் பேர் தேர்வு செய் யப்பட்டு அரசுப் பணியில் அமர்த் தப்படுவதற்காக திட்டமிடப்பட்டு உள் ளது. இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 7 தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, 5 தேர்வு கள் தற்போது வரை நடை பெற்றுள்ளன” என தெரிவித்தார்.