சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது’
நெல்லை ஜாகீர் உசேன் படுகொலை
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் படு கொலை வழக்கில் யாராக இருந்தா லும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் உறுதியளித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேர வையில் கேள்வி நேரத்திற்குப் பிறகு, நெல்லை படுகொலை குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மா னம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர், “திரு நெல்வேலியில் ஓய்வுபெற்ற காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன், செவ்வாயன்று அதி காலை தெற்கு மவுண்ட் பகுதியில் செல்லும்போது, அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்” என்றார். திருநெல்வேலி தொட்டி பாலத் தெருவைச் சேர்ந்த இருவர் இவ்வழக்கில் நீதிமன்றத்தில் சரண டைந்ததாகவும், மற்ற குற்ற வாளிகளைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். முன்பகை விவரம் காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில், ஜாகீர் உசேனுக் கும் கிருஷ்ணமூர்த்தி என்கிற முக மது தவுபிக்குக்கும் நிலம் தொடர் பாக பிரச்சனை இருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து முகமது தவுபிக் மற்றும் அவரது மைத்து னர் அக்பர் ஷா ஆகியோர், ஜாகீர் உசேன் மீதும், ஜாகீர் உசேன் அவர் களின் எதிர்தரப்பினர் மீதும் மாறி மாறி புகார்கள் அளித்துள்ளனர். கடந்த மாதம் ஜாகீர் உசேன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முகநூலில் காணொலி வெளியிட்டதைத் தொடர்ந்து, எதிர்த்தரப்பினரை விசாரணைக்கு அழைத்திருந்தனர். விசாரணை நடைபெற்று வந்த நிலையிலேயே இக்கொலை நடந்துள்ளது. இவ்வழக்கில், “குற்ற வாளிகள், அவர்களுக்குப் பின்னணியில் இருந்தவர்கள் அனைவர் மீதும் உரிய விசாரணை மேற்கொண்டு, பாரபட்சமின்றி நீதி யின் முன் நிறுத்தப்படுவார்கள். சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுத்துக் கொள்ள இந்த அரசு அனுமதிக்காது” என்று முதல மைச்சர் உறுதிபட தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் கண்டனம் எதிர்க்கட்சித் தலைவர் எடப் பாடி பழனிசாமி, “ஜாகீர் உசேன் 3 மாதங்களுக்கு முன் உயிருக்கு ஆபத்து என காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். முறை யான விசாரணை நடத்தப்பட்டிருந் தால் கொலை தடுக்கப்பட்டிருக் கும். புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரிகள் மீதும் நட வடிக்கை தேவை” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாகைமாலி, “சிலரை மட்டுமே கைது செய்து முக்கிய குற்ற வாளிகளைக் கைது செய்ய காவல் துறை தயக்கம் காட்டுவது சரி யான நடவடிக்கை அல்ல. பலியான ஜாகீர் உசேன் குடும்பத்தை பாது காக்க ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்” என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் டி.ராமச்சந்திரன், “குற்றவாளி களுக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டிருப்பது கண்டிக்கத் தக்கது. நெல்லை சரக காவல் ஆணையரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என்றார். நெல்லை தொகுதி பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “வக்ஃப் வாரியத்தை நிர்வாகம் செய்வது யார் என்பதில் இரு தரப்புக்கும் இடையில் பிரச்சனை இருந்துள்ளது” என்றார்.
மனிதநேய மக்கள் கட்சித் தலை வர் ஜவாஹிருல்லா, “வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை மீட்பதற் கான சட்டப் போராட்டத்தை ஜாகீர் உசேன் நடத்தி வந்தார். கொலை யுண்ட ஜாகீர் உசேன் மற்றும் அவரது மனைவி மீது தவறாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந் தது. அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்ததும் அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது. காவல் துறை அதிகாரிகள் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். ஜி.கே.மணி (பாமக), ஜே.ஜே.பிரன்ஸ் (காங்கிரஸ்), சதன் திரு மலைக்குமார் (மதிமுக), முகமது ஷாநவாஸ் (விசிக), ஈ.ஆர்.ஈஸ்வரன் வேல்முருகன் ஆகியோ ரும் கொலை சம்பவத்தைக் கண்டித்து உரையாற்றினர். மறைந்த முன்னாள் முதல மைச்சர் கருணாநிதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர் ஜாகீர் உசேன் என்பது குறிப்பிடத் தக்கது.