tamilnadu

img

புதுச்சேரியில் ‘முழு அடைப்பு’ போராட்டம் மாபெரும் வெற்றி

புதுச்சேரியில் ‘முழு அடைப்பு’ போராட்டம் மாபெரும் வெற்றி

புதுச்சேரி, ஜூலை 9 -  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தியுள்ள ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்தும், புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும் புதன்கிழமை (ஜூலை 9)  சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு  மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில்  நடைபெற்ற ‘முழு அடைப்பு’ போராட்டம்  மாபெரும் வெற்றி பெற்றது. இதையொட்டி புதுச்சேரி அண்ணா  சாலை, நேரு வீதி, காமராஜர் சாலை  மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி களில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழு மையாக அடைக்கப்பட்டன. ஆட்டோ,  டெம்போ, தனியார் பேருந்துகள் ஓட வில்லை. நகரத்தின் உள்ள குபேர் அங்காடி, சின்ன மணிக்கூண்டு மார்க்கெட் வேலைநிறுத்தப் போராட்டத் திற்கு ஆதரவு அளித்து மூடப்பட்டி ருந்தது. பள்ளிகளுக்கு விடுமுறை புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது. தனியார் பேருந்துகள் இயங்கா ததால் அரசுப் பள்ளிகளில் பயிலும்  மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக  காணப்பட்டது. திரையரங்குகளில் இரண்டு காட்சிகள் ரத்து செய்யப் பட்டன. பிஎஸ்என்எல், எல்ஐசி, தபால் துறை  ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் அப்பணி கள் பாதிக்கப்பட்டன. புதுச்சேரி அரசு  ஊழியர்களின் வருகையும் குறை வாகவே காணப்பட்டது. மறியல் முழு அடைப்பு போராட்டத்தை யொட்டி சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டி யுசி, தொமுச உள்ளிட்ட பல்வேறு முக்கிய தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடை பெற்றது.  இப்போராட்டத்தில் காங்கிரஸ்  கட்சியின் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயண சாமி, திமுக மாநில அமைப்பாளர், எதிர்கட்சி தலைவர் சிவா, சிபிஎம் மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன்,  மாநில செயற்குழு உறுப்பினர் வெ. பெருமாள், சிபிஐ மாநிலச் செயலாளர்  சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் தேவ.பொழிலன் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் சேது செல்வம், சீனுவாசன், ஞானசேகரன், அண்ணா அடைக்கலம், செந்தில், வேணுகோபால், மகேந்திரன் உட்பட  திரளான இந்தியா கூட்டணி கட்சி களின் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள், தொண்டர்கள், தொழிற் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.  முன்னதாக அண்ணா சாலையில் இருந்து வந்தவர்களை பேருந்து நிலையம் எதிரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் சாலை யில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல், அரியாங்குப்பம், வில்லியனூர், கன்னியகோவில், மத கடிப்பட்டு, திருக்கனூர், சேதராப் பட்டு, காரைக்கால் ஆகிய பகுதி களில் வேலைநிறுத்த மறியல் போராட் டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை யினர் கைது செய்தனர்.