tamilnadu

img

“அவர்கள் ஆபத்தானவர்கள் என்றனர், நாங்கள் கம்யூனிஸ்டுகள் என பதிலுரைத்தோம்”

“அவர்கள் ஆபத்தானவர்கள் என்றனர், நாங்கள் கம்யூனிஸ்டுகள் என பதிலுரைத்தோம்”

கோவையில் ஜான்பிரிட்டாஸ் எம்.பி. பேச்சு

“பாஜகவினர் ஆபத்தானவர்கள் என்ப தற்காக அஞ்சி மிரளப் போகிறவர்களல்ல, ஏனெனில் நாங்கள் கம்யூனிஸ்டுகள்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அகில இந்திய 24-ஆவது மாநாட்டை யொட்டி, கோயம்புத்தூரில் சிறப்புக் கருத்த ரங்கம் நடைபெற்றது. இதில், “மோடியின் இந்தியா - எதிர் - கம்யூனிஸ்ட்டுகளின் இந்  தியா” என்ற தலைப்பில் சிபிஎம் கேரள  மாநிலக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் ஜான் பிரிட்டாஸ் உணர்ச்சிப்பூர்வ மான உரையாற்றினார். அவரது உரை, தற்போதைய அரசியல் சூழலில் கம்யூ னிஸ்டுகளின் பங்களிப்பை ஆழமாக பிரதி பலித்தது.

கேரளா - கம்யூனிஸ்ட் ஆட்சியின் செயல்திறனுக்கு எடுத்துக்காட்டு

“மோடியின் அரசோடு ஒப்பிடுகை யில், கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இருந்  தால் என்ன சாதிக்க முடியும் என்பதை கேரளா நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இது கம்யூனிஸ்ட் ஆட்சியின் திற னுக்கான உதாரணம்,” என்று பிரிட்டாஸ் குறிப்பிட்டார்.

மோடியாவாக மாறியிருக்கும் மீடியா

“மோடியின் இந்தியாவில் மீடியா என்பது ‘மோடியாவாக’ மாறியுள்ளது. 1980-களில் நான் பத்திரிகையாளராக இருந்த போது, ராஜீவ் காந்தி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்தார். ஆனா லும் அப்போது ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட்டன. போபர்ஸ் உள்ளிட்ட ஊழல்  களை வெளிக்கொண்டு வர தைரியம் இருந்தது,” என்று அவர் நினைவு கூர்ந்தார். “கடந்த 10 ஆண்டுகளாக ஊடக சுதந்தி ரம் மோடியின் ஆட்சியில் கூண்டில் அடை பட்டுள்ளது. எப்போதும் மோடியின்  பெயரை மந்திரமாக ஓதிக்கொண்டிருக் கும் ஊடகமாக மாறியுள்ளது.

மதச்சார்பின்மைக்கு  ஏற்பட்ட பாதிப்புகள்

இன்றைய மோடி ஆட்சியில் அமைச்ச ரவையில் சிறுபான்மையினருக்கு எந்த  பிரதிநிதித்துவமும் இல்லை. இந்தியா வில் 20 கோடி இஸ்லாமியர்கள் இருக்கும்  நாட்டில், ஒன்றிய அரசில் அவர்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை,” என்று  கவலை தெரிவித்தார். 1992 பாபர் மசூதி இடிப்பை நினைவு கூர்ந்த அவர், “பாபர் மசூதி இடிப்பின் போதே இந்திய தேசத்தின் ஜனநாயகம் குழி  தோண்டி புதைக்கப்பட்டது. ஜனநாயகம், கூட்டாட்சி, மதச்சார்பின்மை ஆகியவற் றின் மீது கடும் தாக்குதல்கள் நடைபெறு கின்றன,” என்றார்.

மாநில உரிமைகள் மீதான தாக்குதல்

ஒன்றிய அரசு ஆளுநர் அலுவல கத்தைப் பயன்படுத்தி மாநில அரசு களின் செயல்பாடுகளை முடக்க நட வடிக்கை எடுக்கிறது. கேரளத்தில் அண்மை வரை ஆளுநர் ஆரிப் முகமது கான் அரசின் நடவடிக்கைகளில் தினமும் தலையிட்டார்; மாநில அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டார். இப்போது அவர் மாற்றப்பட்டுள்ளார், ஆனால் தமிழகத்தில் ஆர்.என். ரவி தொடர்கிறார்,” என்று சுட்டிக்காட்டினார். “இந்தி மொழித் திணிப்பும் தீவிரமாக நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தில் 1962-இல் அண்ணா எச்சரித்த அதே நிலை தான் இன்றும். அமைச்சர்கள் அனுப்பும் கடிதங்கள் கூட இந்தியில் இருக்கின்றன. எனக்கு மூன்றுமுறை இந்தியில் கடிதம்  வந்தது; நான் மலையாளத்தில் பதில் அனுப்  பிய பிறகுதான் அது நிறுத்தப்பட்டது,” என்று பிரிட்டாஸ் பகிர்ந்தார். மணிப்பூர் கலவரம் -  மோடி அரசின் தோல்வி “மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளாக கலவரம் நடக்கிறது. ஒரு நாள்கூட பிரத மர் அங்கு செல்லவில்லை. நாடாளு மன்றத்தில் மணிப்பூர் குறித்து பேசுவதற்கு உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை” என்று கண்டனம் தெரிவித்தார். “முன்பு குக்கி, மெய்டெய், நாகா இன மக்கள் சகோதரத்துவமாக வாழ்ந்தனர். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அவர்கள்  இடையே வெறுப்பு சுவர் எழுப்பப்பட்டுள் ளது. இப்போது குக்கி இனத்தினர் இம் பால் பள்ளத்தாக்கிற்கும், மெய்டெய் மக்கள்  குக்கி பகுதிகளுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.

கல்வித்துறையில்  ஆர்எஸ்எஸ் ஊடுருவல்

“இன்று உயர்கல்வியை யுஜிசி தனது  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி கள் நடக்கின்றன. இந்தியாவில் 1074 பல்க லைக்கழகங்களில், 50 மட்டுமே ஒன்றிய அர சின் கீழ் உள்ளன. சுமார் ஆயிரம் பல்க லைக்கழகங்கள் மாநில அரசுகளால் உரு வாக்கப்பட்டவை. இவற்றை ஒன்றிய அரசு  கைப்பற்ற முயல்கிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழ கத்தில் நான் படித்தபோது, உலக விவகா ரங்கள் அனைத்தையும் சுதந்திரமாக விவாதிக்க முடிந்தது. இப்போதோ, பாலஸ்  தீனம் குறித்து பேசவும் துறைத் தலைவ ரின் அனுமதி தேவை. பல முக்கிய பொறுப்பு களில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர்.

மோடியின் இந்தியா;  கம்யூனிஸ்ட்டுகளின் இந்தியா  - அடிப்படை வேறுபாடு “மோடியின்

இந்தியா பிளவுபட்ட இந்தியாவை உருவாக்க விரும்புகிறது; கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்ட இந்தியா வை உருவாக்க விரும்புகிறோம். தேசத்தின்  ஜனநாயகம், கூட்டாட்சி, மதச்சார்பின்மை ஆகியவற்றை பாதுகாக்கவே நாம் போரா டுகிறோம். மோடி அரசோ இவற்றின் மீது  கடுமையான தாக்குதல்களைத் தொடுக்கி றது” என்று தெளிவுபடுத்தினார்.

விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு

“இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது கம்யூனிஸ்டுகள். அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட போராட்ட வீரர்களில் 80 சதவிகிதம் பேர்  கம்யூனிஸ்டுகள். நேதாஜியின் படையில் போராடிய கேப்டன் லட்சுமி, நாடு விடு தலை அடைந்தபோது வேலூர் சிறையில்  தேசியக் கொடியேற்றிய ஏ.கே. கோபா லன் - இவர்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகள்”  என்று பெருமையுடன் நினைவு கூர்ந்தார். “ஆனால் விடுதலைப் போராட்டத் தில் எந்த பங்கும் ஆற்றாமல், பிரிட்டி ஷாருக்கு அடிவருடிகளாக இருந்த வர்கள் இன்று சுதந்திரம், ஜனநாய கம் பற்றி பேசுகிறார்கள். ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் ‘கம்யூனிஸ்டுகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதி ராக போராட சக்தி சேமியுங்கள்’ என்றே சொன்னார்,” என்று சுட்டிக்காட்டினார்.

கம்யூனிஸ்டுகளின் தியாகம்

ஒருமுறை நாடாளுமன்றத்தில் தான்  பேசியபோது, “நீங்கள் கவனமாக இருங் கள், அவர்கள் ஆபத்தானவர்கள்” என்று ஒரு காங்கிரஸ் தலைவர் எச்சரித்ததாக பிரிட்டாஸ் நினைவு கூர்ந்தார். அதற்கு தான், “தனிநபராக அல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவே பேசுகிறேன். எந்த நிலைமையையும் எதிர்  கொள்ளும் திறன் எங்களுக்கு உண்டு,” என்று பதிலளித்ததாகவும், அந்த சம யத்தில் ஒரு திமுக உறுப்பினர், “கம்யூ னிஸ்டுகள் இல்லாவிட்டால் இந்தியா வில் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் இருந்திருக்காது” என்று குறிப்பிட்டதை யும் பகிர்ந்து கொண்டார். “இந்த தேசத்தின் மதச்சார்பின்மை, பன்முக கலாச்சாரத்தை பாதுகாக்கவே நாம் போராடுகிறோம். இந்தப் போரா ட்டத்தை வீரியத்துடன் முன்னெடுக்க வேண்டிய கடமை நம் முன் உள்ளது. அதற்காகவே நமது கட்சியின் அகில  இந்திய மாநாடு மதுரையில் நடைபெறு கிறது,” என்று தனது உரையை நிறைவு செய்தார்.