மதுரை,மே 25- மதுரை அருகே நிகழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கக்கூடா முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகன் பார்த்தீபன் (24). இவர் கோயம்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். வியாழனன்று கல்லூரியில் தேர்வுக்கு பணம் கட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் கோயம்புத்தூரில் இருந்து முதுகுளத்தூருக்கு வந்து கொண்டிருந்தார். வெள்ளியன்று அதிகாலை 3.45 மணியளவில் திண்டுக்கல் மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் வாடிப்பட்டி ஜவுளி பூங்கா முன்பு வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம்,பைக் மீது மோதியது. இதில் பலத்தக் காயமடைந்த பார்த்திபன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.