tamilnadu

img

உ.பி. பாஜக ஆட்சியில் பரவும் வல்லுறவுக் கலாச்சாரம்!

லக்னோ:
பாஜக ஆட்சியில், உத்தரப்பிரதேசம் முழுவதும் பாலியல் வல்லுறவுக் கலாச்சாரம் பரவியுள்ளது; இதற்கு ஆதித்யநாத் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுதீந்திர படோரியா கூறியுள்ளார்.“உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. உன்னாவ் மற்றும்ஷாஜகான்பூர் சம்பவங் களை அடுத்து, தற்போது முசாபர்நகர் சம்பவம் அரங்கேறியுள்ளது. வல்லுறவுக் கலாச் சாரம் உத்தரப்பிரதேசம் முழுவதும் பரவி வருகிறது” என்று படோரியா குறிப் பிட்டுள்ளார்.முசாபர் நகர் மாவட்டத் தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. வழக்கை வாபஸ் பெறுமாறு குற்றவாளிகள் அச்சுறுத்தியதாகவும், இந்த அச்சுறுத்தல் காரணமாகவே பாதிக்கப்பட்ட பெண் தற் கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்பட்டது. இதன்பின்னணியிலேயே, பாலியல்வல்லுறவுக்கு உள்ளானவர்களுக்கு நீதி வழங்க மாநில அரசு தவறிவிட்டது என்று படோரியா விமர் சித்துள்ளார்.“முதல்வர் யோகிஆதித்யநாத், உத்தரப்பிரதேசத்தில் பெண்களின் கௌரவத்தை கவனித்துக் கொள்ளும் நம்பிக்கையான சூழ்நிலையை உருவாக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை” என்று அவர்
குற்றம் சாட்டியுள்ளார்.