ராஞ்சி:
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்குவதற்கு பாஜக மறுத்து விட்டது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் ஆகியவற்றையும் பாஜக தனது கூட்டணியிலிருந்து வெளியே தள்ளிவிட்டது.இந்நிலையில், ராம்விலாஸ் பஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தி கட்சியின் புதிய தலைவருமான சிராக் பஸ்வான் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:பாஜக கூட்டணியில் எங்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்குமாறு பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் முதல்வர் ரகுபர் தாஸ் ஆகியோரிடம் கேட்டோம். ஆனால் எந்த பதிலும் இல்லை. 2 அல்லது 3 தொகுதிகளாவது தருமாறு கேட்டோம். அதில் ஒரு தொகுதி கடந்த தேர்தலில் பாஜக மிக மோசமாக தோல்வியடைந்த ஒன்று. இருந்தாலும் எங்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து பாஜக தலைவர்கள் எந்த உறுதியும் அளிக்கவில்லை. எங்களை பாஜக இப்படி நடத்தும் என எதிர்பார்க்கவில்லை.இவ்வாறு சிராக் பஸ்வான் கூறியுள்ளார். ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் 50 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு ய்துள்ளதாகவும் பஸ்வான் தெரிவித்துள்ளார்.