லக்னோ:
உத்தரப்பிரதேசம் லக்னோவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், திங்களன்று உன்னாவ் பகுதியில் உள்ள எஸ்பி அலுவலகத்திற்கு வந்துள்ளார். பின்னர் அலுவலகத்திற்கு வெளியே சென்ற அவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.இதில் பலத்த தீக்காயம் அடைந்த அந்தப் பெண் ணுக்கு தற்போது கான்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.தன்னை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய அவதேஷ் சிங் என்ற நபரை, நீதிமன்றம் ஜாமீனில் விடுதலைசெய்ததால், மனமுடைந்து அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந் துள்ளது.
இதனிடையே, பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்குவது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொடர்ந்து ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந் துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுபோல் ஜாமீனில் வந்தவர்களால் 3 பெண்கள் தீவைத்து எரிக்கப்பட்டு உள்ளனர். ஒரு பெண் தனக்குத்தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டு உள்ளார் என்று அவர்கள் கூறுகின்றனர்.மத்தியப்பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவு வழக்கில் கைதான குற்றவாளி, ஜாமீனில்வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை 30 முறை கத்தியால் குத்தி கொலை செய்தார். பீகாரை சேர்ந்த 23 வயதுஇளம் பெண் ஒருவரும் ஜாமீனில் வந்த குற்றவாளியால் ரேபரேலியில் தீவைத்து எரிக்கப்பட்டார். தற்போதுலக்னோ இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.