லக்னோ, ஜன.9- உத்தரப்பிரதேச மாநிலம் ஹரித்துவாகன்ச் பகுதியை சேர்ந்த வர் அப்துல் ரஹீம். இவருக்கு, அலி காரின் பான் வாலி கோட்டியை சேர்ந்த ரபத் ஜெஹான் என்பவரு டன் ஜனவரி 8, 2013-இல் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது நான்கு வயதில் ஒரு பெண் குழந் தையும் உள்ளது. இந்நிலையில் தனக்கு விலை உயர்ந்த கார் மற்றும் ரூ. 10 லட்சம் வரதட்சணையாக கேட்டு, ரபத் ஜெஹானைத் துன்புறுத்தி வந்த அப்துல் ரஹீம், கடந்த 2018 நவம்ப ரில் 10-இல் திடீரென முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். ரபத் ஜெஹான், இதுதொடர் பாக கடந்த நவம்பர் 14-ஆம் தேதி அலிகார் சிவில் லைன் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளார். அவர்களும் விசாரணைக்கு பின் டிசம்பர் 1-இல் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், ஓராண்டுக்கு மேலாகி யும் ரஹீமை போலீசார் கைது செய்யவில்லை. பாதிக்கப்பட்ட ரபத் ஜெஹா னின் சகோதரர், இதுதொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளித் துள்ளார். அதில், ‘முத்தலாக் கூறிய அப்துல் ரஹீம், பாஜகவின் மாநில நிர்வாகி என்பதாலேயே போலீசார் அவரைக் கைது செய்யாமல் காப்பாற்றப் பார்க்கிறார்கள்; அவர் களாகவே, எங்கள் இரு குடும்பங் களுக்கு இடையே சமாதானம் ஏற் பட்டு விட்டதாக போலி ஆவணங்க ளைக் காட்டுகின்றனர்” என்று குற் றம் சாட்டியுள்ளார். இதனிடையே, பாஜக பிர முகர் அப்துல் ரஹீம், தில்லி கேட் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருப்பதாகவும் தகவல் கள் தெரிவிக்கின்றன.