tamilnadu

உ.பி.யில் தொழிலாளர் சட்டங்கள் 3 ஆண்டுகளுக்கு செல்லாது... அமைச்சரவை முடிவாக்கி ஆதித்யநாத் அரசு அடாவடி

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொழிலாளர்நலச்சட்டங்கள் செல்லாது என்று அம்மாநில ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அடாவடியாக அறிவித் துள்ளது.இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் மாநிலத்தில் அவசரச்சட்டம் பிறப்பிக்கவும் முடிவு செய் துள்ளது.இது உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 10 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தொழிலாளர் வர்க்கம் பல நூற்றாண்டுகளாகப் போராடி- ரத்தம் சிந்திப் பெற்ற உரிமைகளை, கொரோனாகால நெருக்கடியைப் பயன்படுத்திப் பறித்து விடுவதென, மத்திய பாஜகஅரசு திட்டமிட்டுள்ளது. பாஜக ஆளும்குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்டமாநிலங்களில் இதற்கான முன்னோட் டங்களை ஏற்கெனவே துவங்கி விட்டது. வேலைநேரத்தை 8 மணியிலிருந்து 12 மணிநேரமாக அதிகரித்து உத்தரவிட்டுள்ள பாஜக ஆளும் மாநிலங் கள், ஊதியத்தையும் வெட்டிக் குறைத்துள்ளன.

இந்நிலையில்தான், சாமியார் ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், தொழிலாளர் நலச்சட்டங்களையே 3 ஆண்டுகளுக்கு முடக்கி வைத்து உத்தரவிட் டுள்ளது.அமைச்சரவையைக் கூட்டி இதற்கான முடிவை எடுத்துள்ள உத்தரப்பிரதேச பாஜக அரசு, உத்தரப்பிரதேசத் தில் 38 தொழிலாளர் சட்டங்கள் அடுத்த3 ஆண்டுகளுக்கு செல்லாது என்று அறிவித்துள்ளது. 

அடிப்படை ஊதியச் சட்டம் - 1936,தொழிலாளர்கள் இழப்பீட்டுச் சட்டம் -1932, பாண்ட் தொழிலாளர் அமைப்பு (ஒழிப்பு) சட்டம் - 1976 மற்றும் கட்டடம்மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர் கள் சட்டம் - 1996 ஆகிய 4 சட்டங்கள் மட்டுமே அமலில் இருக்கும்; மாறாகஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டங்கள், தொழிற்சாலை பாதுகாப்புச் சட்டம் உட்பட மொத்தம்38 தொழிலாளர் சட்டங்கள் நீக்கப்படுகின்றன என்று அறிவித்துள்ளது,தொழிற்சங்கச் சட்டம், தொழிலாளர்கள் போராடும் உரிமைக்கான சட்டம் ஆகியவற்றையும் ஆதித்யநாத் அரசு செல்லாது என்று அறிவித்துள்ளது.“எங்கள் மாநிலத்தில் சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதனால் பெரியநிறுவனங்கள் மிக அதிகமான அளவில் உத்தரப்பிரதேசத்தில் முதலீடு செய்ய வருவார்கள். பொருளாதார சரிவைச் சரி செய்ய இதுவே இப்போதிருக்கும் நல்ல வழி” என்று முதல்வர் ஆதித்யநாத் கூறியுள்ளார்.தொழிலாளர்களை பழைய கொத்தடிமை முறைக்கு தள்ள நினைக்கும், உத்தரப்பிரதேச பாஜக அரசின் இந்தமுடிவுகளுக்கு எதிராக அம்மாநில தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் அங்கு விரைவிலேயே போராட்டங்கள் வெடிக்கும் என் றும் செய்திகள் வெளியாகியுள்ளன.